கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பீரங்கி ஏன் வைக்கப்பட்டுள்ளது?

 

கொழும்பு பெரிய பள்ளிவாசல் என்பது இலங்கை முஸ்லிம்களின் வாழ்வியலில் அதிகம் தொடர்புபட்டதாகும்.

அப்பாஸிய ஆட்சியாளர் ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரில் இருந்து ஹாலித் பின் பகாயா என்ற ஆலிமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அனுப்பி இங்கு பணிபுரிவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். அவர் மறைந்ததும் அந்த வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது அடக்கஸ்தலத்தில் பதிக்கப்பட்டிருந்த மீஸான் பலகை அல்லது மீஸான் கல் கொழும்பு நூதனசாலையில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.. ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட இந்தப் பள்ளிவாசல் இலங்கை முஸ்லிம்களின் பிரதான அடையாளமாகும்.

தலைப்பிறை, நிவாரணங்களை திரட்டுதல், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை வரவேற்றல், சமூகம் சார்ந்த நீதிமன்ற தீர்ப்புகளை பெற்றுக்கொள்ளுதல் உட்பட பல துறைகளிலும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் வகிபாகம் கணிசமானது.

பள்ளிவாசலின் நுழைவாயிலில் Canon எனப்படும் பீரங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு 500 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ரமழான் மாதத்தில் ஸஹர் முடிவடையும் போது பீரங்கியில் இருந்து ஒரு வெடிவைப்பார்கள். பின்னர் நோன்பு துறக்கும் இப்தார் நேரத்திலும் இதனை வெடிக்க வைப்பார்கள். இதன் மூலம் கொழும்பு நகர மக்கள் உரிய நேரங்களை அறிந்துகொள்வர்.

இலங்கை வானொலியில் (Radio Ceylon) 1947 ஜூன் மாதம் 5ம் திகதி முதல் தடவையாக மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் அஸான் ஒலிபரப்பப்படும் வரையும் (மர்ஹூம் ராமிஸ் ஆலிம் இலங்கை வானொலியில் முதலில் அஸான் சொன்னவர்கள்) Canon எனப்படும் பீரங்கி பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆனால் அரபு நாடுகளில் சிலவற்றில் நோன்பு துறக்கும் நேரத்தை அறிவிக்க இன்றும் Canon சம்பிரதாயபூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

நன்றி; பஸ்ஹான் நவாஸ்
SLBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *