பூகம்பம் ஏறபடும் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி ?

துருக்கிய பூகம்பம் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,இலங்கையின் சில பகுதிகளில் உணரப்பட்ட சிறிய அளவிளான நில அதிர்வுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு பூகம்பம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு மிக முக்கியமானது.பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவது சிறந்தது.

01.பூகம்பம் ஏற்பட்ட உடன் நீங்கள் வீழ்வதற்கு முன் முழங்கால் இட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.அவசரமாக உள்ளே இருந்தால் வெளியேறி திறந்த வெளி ஒன்றை சென்றடையவும்.

02.ஒரு அரையில் இருந்து இன்னொரு அரைக்கு ஓடி பொருட்களை பாதுகாக்க முயற்சிக்க வேண்டாம். நீங்கள் ஓடுவதற்கு முன் கட்டிடம் உடைந்து விட்டால் உங்கள் தலை மீது கையை வைத்தவாறு நீங்கள் பாதுகாப்பு எனக் கருதும் பலமான இடமொன்றை நோக்கி நகரவும் .கைத் தொலைபேசி கையில் இருந்தால் நன்று அதற்காக தேடி அலைய வேண்டாம்.

03.கண்ணாடி போன்ற இலகுவில் உடையும் பொருட்கள் உள்ள இடங்களில் இருக்க வேண்டாம்.அவ்வாறான இடத்தில் சிக்கினால் ஏதாவது பாதுகாப்பான பொருளை எடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள்.

04.நீங்கள் சமையல் அரையில் இருந்தால் வாயு அடுப்பை. உடன் துண்டித்து விடுங்கள்.

05.நீங்கள் கட்டிலில் இருந்தால் தலையானைகளைக் கொண்டு உங்கள் உடம்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள் .ஆனால் மூக்கை அடைக்குமாறு வைக்க வேண்டாம்.

06.யன்னல் அல்லது சுவரகளுக்கு அண்மையில் இருக்க வேண்டாம்.

07.நீங்கள் வெளியேற முடியாது Trapped ஆகி இருந்தால்.பதற்றப்பட வேண்டாம் .பதற்றம் உங்கள் வெளியேறும் சக்தியை குறைக்கும். ஏதாவது உலோக பொருளால் இடை ,இடையே முடிந்தவாறு ஒளியேற்றவும்.தள்ளி அடித்துக் கொண்டு முன் செல்ல முயற்சிக்க வேண டாம்.

08.இலங்கை ஒரு தீவு என்பதால் பலமான பூகம்பத்தை உணர்ந்தால் கடலுக்கு அருகில் உள்ளோர் இயன்றவரை உயரமான இடத்திற்கு செல்லவும்.

09.ஆன்மீக விவகாரங்களில் கவனம் செலுத்தவும்.

10.நீங்கள் வாகனத்தில் செல்லும் போது பூகம்பம் ஏறபட்டால் வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் .வாகனத்தை நிறுத்தி அதனுள் இருக்கவும்.
உடனே வானொலியை இயக்கவும் ,அல்லது சமூக வலைத்தளங்களை பார்வை இடவும்.

  1. பாடசாலை நேத்தில் பூகம்பம் ஏற்பட்டால் மாணவர்களை உடன் பாதுகாப்பான இடத்துக்கு நிகர்த்தவும் .முடியாத அளவுக்கு பூகம்பம் பலமாக இருந்தால் அந்த நேரம் வகுப்பில் உள்ள ஆசிரியர் கவனமான சுய தீர்மானங்களை தாமதிக்காது எடுக்க வேண்டும் .மாணவர்கள் ஆளுக்கொரு தீர்மானம் எடுத்தால் பேரழிவு ஏற்படலாம்.

12.அவ்வாறான அவசரமான நிலைகளில் Hotline Number களை சகல நிறுவனங்களும் அறிவிக்க. வேண்டும்.

இறைவன் எம் அனைவரையும் இவ்வாறான பயங்கர ஆபத்தான நிலமகள் நின்றும் காப்பானாக .

நன்றி;எம்.என் முஹம்மத்
ஆசிரிய ஆலோசகர் -விஞ்ஞானம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *