பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் காலமாககியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்தில் இன்று பிற்பகல் காலமானதாகவும் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 78 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரின் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்களும், இசை துறையை சேர்ந்தவர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கலைவாணி எனும் இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.
திரையிசைப் பாடல்கள் மட்டுமின்றி பல பக்திப் பாடல்களையும், ஆல்பம் எனப்படும் தனியிசைப் பாடல்களிலும் வாணி ஜெயராம் பாடியுள்ளார்.
அண்மையில் குடியரசு விழாவையொட்டி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் அந்த விருதைப் பெறுவதற்கு முன்பாக உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.