தூக்கத்தை தள்ளிப்போடும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது!

நம் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை (சுமார் 25 வருடங்கள்) தூங்கியே கழிக்கிறோம். சிலர் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள், சிலர் தூங்கவே மாட்டார்கள்.

ஆழ்ந்து உறங்குபவர்களுக்கு வாசனை தெரியாது, தும்மல் வராது இது போன்று தூக்கம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் ,இந்த பதிவில் காணலாம்.

தூக்கத்தைத் தள்ளிப் போடும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உள்ளது

உறங்க வேண்டிய நேரம் ,இது என்று நம் உடல் கூறும்போதும் நாம் விழித்திருக்க முடியும். ஆனால் மற்ற பாலூட்டிகள், தூங்க வேண்டிய கட்டாயத்தில் ,இருக்கும்.

தூக்கம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

உங்கள் பிஸியான நோயெதிர்ப்பு மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருக்க, ,ரவில் ஏழு முதல் எட்டு மணிநேரம் தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

மக்கள் தூக்கத்தில் நடக்கின்றனர்

நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷனின் கூற்றுப்படி, 15 வீதமான மக்கள் தூக்கத்தில் நடக்கிறார்கள் ஒரு நபர் தூங்குவதற்கு 10-15 நிமிடங்கள் எடுக்க வேண்டும்

இது தூங்குவதற்கான சராசரி நேரமாகும். நீங்கள் 5 நிமிடங்களுக்குள் தூங்கினால், நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள், அதாவது இடையில்  முழிப்பு வரலாம்.

இரவு முழுவதும் யாரும் தூங்குவதில்லை

நாம் அனைவரும் ,ரவில் பலமுறை எழுந்திருப்போம், பெரும்பாலான நேரங்களில் அது அதிக வெப்பம் அல்லது குளிர் காரணமாகவும் ,ருக்கலாம், அல்லது தேவையற்ற சத்தம் கூட நம்மை எழுப்பும்.

நாம் தூங்கும்போது, வாசனையைப் பற்றிய நமது உணர்வு குறைகிறது

நாம் தூங்கும் போது சத்தம் நம்மை எழுப்புகிறது, ஆனால் வாசனைகள் நம்மால் உணரமுடியாது. உறக்கத்தில் தும்ம முடியாது. ஒவ்வொரு ,ரவும் 7-9 மணிநேரம் தூங்குவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *