16 ஆண்டுகள் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் மாணவன்!

ஆரம்ப பாடசாலையில் கற்கும் ஜோசப் நாள் தவறாமல் பாடசாலைக்குப் போவார். ஆனால், பாடாலையில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோருக்குமே ஜோசப்பை பார்த்தால் கேலியாக இருக் நீண்ட கும். “தலைக்குள் ஒன்றும் இல்லாதவன்” என்று சக மாணவர்கள் கிண்டல் செய்யார்கள்.

ஆனால், ஜோசப்புக்கு பழகிப்போன ஒன்று. வருடம் இரண்டு வருடம் அல்ல, 10 வருடங் ஒரே வகுப்பில் கற்பது தான் ஜோசப் பின் பெரிய பிரச்சினை. ருவண்டாவின் உமிஜ்மி வகுப்பில் இருக்கும் வாகிகாலி கசேஞ்சே ஆரம்ப பாடசாலையில் 2006 ஆம் ஆண்டு சேர்ந்த ஜோசப், ஒவ்வொரு ஆண்டும் பரீட்சை யில் தோற்று அதே வகுப்பிள் இருக்கிறார்.

வகுப்பின் கடைசி இடத்திலும் ஜோசப்பை யாராலும் முந்தி கொள்ள முடியாது.

ஜோசப்புடன் படித்த மற்றவர்கள் இப்போது மருத்துவர்களாக வும், பொறியியளாளர்களாக சமூகத்தில் பெரிய இடத்திற்கு வந்து விட்டார்கள். ஆனால் ஜோசப் இன்னும் அதே இடத்தில்தான் இப்போது அவரது வகுப்பாசிரியராக இருப்பவரும். அவருடன் கற்றவர்தான்.

ஜோசப்புக்கு 22 வயதாகின்றது. ஆனால் அவரது உடல் தோற்றத்தில் மாற்றமில்லை. இன்னும் ஆரம்ப பாடசாலையில் கற்பவர் போன்று தான் இருப்பார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இன்னும் சிறுபிள்ளை போல் நான் தெரிவார். தலை பெருந்து உடல் சிறிதாக இருக்கும் ஜோசப் உண்மையில் ஒரு விசேட தேவையுடையவர் அவருக்கு கற்றது சிலநிமிடங்களில் மறந்துவிடும்.

அவருக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கூறும் போது,

‘”நான்” ஜோசப்பின் வகுப்பாசிரியர். அவர் அவர் இந்தப் பாடசாலையில் 2018 இல் இருந்து நான் அவருக்கு கர்பிக்க ஆரம்பித்தேன். கற்பிக்கும் போது அவர் மிகவும் கவனமாக கேட்டிருப்பார். ஆனால் புதிய பாடம் ஒன்றை கற்பித்தால் மறந்து விடுகிறார் என்பதுதான் அவரது பிரச்சினை.

வகுப்பில் இருக்கும் புத்திசாலி மாணவர்கள் அவருக்கு புதிய பாடங்களை புரிய வைப்பதற்கு அவருக்கு உதவுவார் என்று நான் நாம்புகிறேன். ஆனாலும் சில நிமிடங்களிலேயே அவர் கற்றதை மறந்து விடுகிறார்.

வீட்டிலும் இதே பிரச்சினைதான்.

ஏதாவது பொருளை வாங்கம் கடைக்கு அனுப்பினாள் மறந்து வேறு எதையாவது வாங்கி வருகிறான் என்று அவரது தாயார் கவலையாக கூறினார். ஆனால் வீட்டு வேலைகளை கச்சிதமாக செய்கிறார்.

காலையில் பாடசாலை செல்வதற்கு முன் வீட்டுக்கு நீர் இறைத்து விட்டுத் தான் செல்வார், வீட்டை சுத்தம் செய்வது. சமையலுக்கு உதவுவது என்று எல்லா வேவையையும் பார்ப்பார்.

“அவன் எனது இரண்டாவது பிள்ளை. ஆரம்ப பாடசாலையில் 15 ஆண்டுகளாக (2021) கற்கிறான். அவனுடன் கற்றவர்கள் இப்போது பட்டப்படிப்பை முடித்து மருத்துவர்களாகக் இருக்கிறார்கள்” என்கிறார். ஜோசப்பின் தாய்
படிப்பு வரவில்லை என்றாள் அதனை
நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார் என்று ஆசிரியர்கள் கூட ஜோசப்புக்கு அறிவுரை கூறுகிறார்கள். யார் என்ன சொன்னாலும் ஜோசப் தனது கல்வியை விடுவதாக இல்லை. ஜோசப் பின் கனவு பெரியது. எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியாக ஆகப்போவதாக கூறுகிறார்.

“பட்டப்படிப்பை முடித்த பின் நான் நாட்டின் ஜனாதிபதியாக விரும்பு கிறேன். ஒருநாள் நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாவேன் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். வகுப்பில் நான் கடுமையாகப் படிக்கிறேன். அரசியல் பற்றியும் படிக்கின்றேன். அது தலைவராவதற்கு நல்லது. எனது ஊர் மக்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை எனக்கு கடவுள் உதவுவான் என்பது எனக்குக் தெரியும்” என்கிறார் ஜோசப்,

என்ன தான் சொன்னாலும் ஜோசப்புக்கு கல்வி என்பது சுட்டுப்போட்டாலும் வரவில்லை. ஆசிரியர் சொல்லித்தரும் போது பகல் கனவு காண்பது போல் இருக்கும். அவர் கூறுவதை புரிந்துகொள்ள கடினமாக இருக்கின்றது. எதைப் பற்றியாவது யோசிக்கும் போது ஏதோ மாயை போல இருக்கும். எல்லாமே மறந்துவிடும்.

உண்மையில் ஜோசப்புக்கான கல்வி வேறு அவரால் பாடசாலையில் சாதாரண மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுகொடுக்க முடியாது. விசேட தேவையுடைய மாணவராக யாரும் அவரை
பார்ப்பதாக தெரிய வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *