சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்ல தயாராகுகிறது நாசா!

சந்திரனுக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான இரண்டு ஆர்ட்டெமிஸ் பயணங்களுக்கு எல்லாம் தயார் நிலையில்  இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

பல தோல்வியடைந்த பயணங்களுக்குப் பிறகு ஆளில்லா ஓரியன் கேப்ஸ்யூலை இருபத்தைந்து நாட்கள் சந்திர சுற்றுப்பாதையைச் சுற்றி வெற்றிகரமாகச் செலுத்திய Atemis பயணத்தின் அனுபவத்தின் அடிப்படையில் இந்த சந்திர பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

Atemis இரண்டாவது மிஷன் ரோவரை சந்திர சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றால், 2025 இல் சந்திரனில் ரோவரை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக 28 பில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டத்தினை நாசா தயாரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித இனத்தை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் சென்று நிலவில் நீண்ட காலம் வாழும் திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *