சிங்கப்பூரில் அபூர்வ கிறிஸ்மஸ் மரம்!

சிங்கப்பூரின் Millenia Walk கடைத்தொகுதியில் வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கூம்பு வடிவத்தில் 800 மரத் துண்டுகள் வைக்கப்பட்டு, அவை மீது நட்சத்திர வடிவத்தில் விளக்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

7 மீட்டர் உள்ள அந்த மரம் உண்மையில் கிறிஸ்துமஸ் மரம்தானா என்று இணையவாசிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் மரங்களும் அவற்றில் உள்ள அலங்காரங்களும் பொதுவாக விழாக்காலம் முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்படுவதுண்டு.

கடைத்தொகுதியின் கிறிஸ்துமஸ் மரத்தை விழாக்காலம் முடிந்த பிறகும் பயன்படுத்தமுடியும் என்றும் அதைத் தொடர்ந்து ரசிக்கமுடியும் என்றும் Millenia Walk-இன் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மரத்துண்டுகளை இருக்கைகளாகவும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டது.

மரத் துண்டுகளை வெட்டும் சிங்கப்பூரின் ஆகப் பழைமையான ஆலையான Tat Hin Timber-க்குச் சமர்ப்பணம் செய்யும் வகையில் மரத்தைச் செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் வருங்கால மேம்பாடுகளுக்காக நீக்கப்படும் வனப்பகுதிகளிலுள்ள மரங்களுக்கு என்ன ஆகும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முனைவதாக அது கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *