தாமதமாக வந்த இராஜாங்க அமைச்சரை வறுத்தெடுத்த கொரிய நாட்டு அதிகாரி!

கூட்டமொன்றுக்கு தாமதமாக வந்த இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவலை வறுத்தெடுத்திருக்கிறார் இலங்கை வந்திருக்கும் கொரியா நாட்டை சேர்ந்த அரச அதிகாரி ஒருவர்..

‘தாமதமாக வருவது பழக்கவழக்கமாகி இருக்கிறது..இந்த நிலை தொடர்ந்தால் எப்போது முன்னேறப் போகிறீர்கள்? எங்கள் ஊரில் இப்படி நடந்திருந்தால் உரிய தண்டனை கிடைத்திருக்கும்..’ என்றும் விளாசியிருக்கிறார் அந்த அதிகாரி..

இப்படித்தான் 2000 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் ,சந்திரிகா ஜனாதிபதியாக இருந்தபோது இலங்கையில் பணியாற்றிய அமெரிக்கத் தூதுவர் அஷ்லி வில்ஸ, ஒருதடவை அழைப்பின்பேரில் ஜனாதிபதியை சந்திக்க சென்றார்..

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தும் ஜனாதிபதி வராத காரணத்தினால்’ , அங்கிருந்து வெளியேறிய தூதுவர் , தேவையானால் சந்திரிகா வந்து தன்னை சந்திக்கட்டும்’ என்று கூறிவிட்டு வந்தார்.. நேரத்திற்கு கடமையாற்றாதவர்.. நேரத்திற்கு நிகழ்வுக்கு வராதவர் என்று பட்டியலிட்டால் சந்திரிகா முதலிடத்தை பிடிப்பார்..

மேக்கப் போட லேட்டாகியத்திற்கெல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காக லேட் ஆகினார் என்று விளக்கம் வரும்.. நீரழிவு நோயாளர் ஒருவர் சந்திரிகாவின் நிகழ்வுக்கு சென்றால் கடும் வேதனை.. சோதனையிட்டு உள்ளே அனுப்பினால் பாத்ரூம் செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்..

இதுதான் இலங்கையின் சீர்கேடு.. தாமதித்து நிகழ்ச்சிகளுக்கு போனால் தான் கெத்து.. செக்கியூரிட்டி சூழ போனால் தான் மாஸ்.. நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வாகனத்தில் போய் தொலைபேசி அழைப்பில் பல நிமிடங்கள் வாகனத்திற்குள் இருந்தபடியே பேசிவிட்டு இறங்கினால் தான் செம.. என்று ஸ்ரீலங்கன் சிஸ்டம் இருக்கிறது…

இதெல்லாம் இந்த கொரியன்களுக்கு எங்கே விளங்கித் தொலையப்போகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *