ஒரே நபரை திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள்!

இந்தியாவில் ஒரே நபரை இரட்டையர் சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

இணை பிரியா இரட்டை சகோதரிகள்

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர்கள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் மும்பையில் பொறியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட பிரிந்ததே இல்லை.

ரிங்கி, பிங்கி தந்தை சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தாய்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால் டாக்சியை அழைத்தார்கள்.

இருவரும் தாயை காரில் அமர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மூவருமே பெண்கள் என்பதால் தாயை உட்கார வைப்பது பிடித்து தூக்குவது, உள்ளிட்ட விஷயங்களில் ரிங்கி மற்றும் பிங்கிக்கு டாக்சி ஓட்டுனரான அதுல் உதவியுள்ளார்.

ஒரே மாலையை அணிவித்து

அதுலின் நல்ல மனதும் உதவும் குணமும் பிங்கி ரிங்கிக்கு மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் வேறு வேறு நபர்களை திருமணம் செய்து கொண்டால் பிரிவு என்பது நிச்சயம் ஏற்படும். தாயின் கருவறையிலிருந்து ஒன்றாக பயணிக்கும் நாம் திருமணத்தில் பிரியக் கூடாது என முடிவெடுத்தனர்.

இதையடுத்து இருவரும் தங்களது காதலை போய் அதுலிடம் கூறி அவரின் சம்மதத்தை பெற்றனர். இரட்டை சகோதரிகளின் தாயும் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள கோலாகலமாக திருமணம் நடந்தது.

அதுலுக்கு மாலை போடும் போது இருவரும் ஒரே மாலையை எடுத்து மணமகன் கழுத்தில் போட்டனர். இது போன்ற பல பல சுவாரசியங்கள் திருமணத்தில் அரங்கேறியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *