தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது?

பிறகு நிர்பயா என்று பெயரிடப்பட்ட பெண், டெல்லி பேருந்து ஒன்றில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான இந்த நாள் நாட்டில் ஒவ்வொருவரின் மனதிலும் பதிந்துவிட்ட நாள்.
குற்றம் நடந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வழக்கில் தண்டனை பெற்ற 4 பேர் ஜனவரி 22 அன்று தூக்கிலிடப்பட உள்ளனர்.

டெல்லியில் உள்ள திகார் சிறை எண் – 3ல் தான் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது வழக்கம். நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல சிறைகளிலும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

டெல்லியின் தேசிய சட்ட பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், மரண தண்டனை குறித்த டெல்லி மையத்தின் (Delhi Center on the Death Penalty) இயக்குநருமான அனுப் சுரேந்திரநாத் கூறுகையில், இந்தியாவின் 30 க்கும் மேற்பட்ட சிறைகளில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். அந்த சிறைகளில் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான வசதிகள் உள்ளன.

தூக்கு தண்டனை எப்படி நிறைவேற்றப்படுகிறது?

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் என பிரத்யேகமான சிறை கையேடு உள்ளது. டெல்லியின் சிறை கையேட்டின் படி, சிஆர்பிசி (குற்றவியல் நடைமுறை சட்டம்) இன் கீழ் மரண உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த உத்தரவில் தூக்கிலிடப்படும் தேதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை பிளாக் வாரண்ட் (Black Warrant) என்றும் குறிப்பிடுகிறோம். ஏனெனில் அதைச் சுற்றி (மூலைகளில்) கருப்பு நிறத்தில் கட்டம் கட்டப்பட்டிருக்கும்.
தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக 14 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. குற்றவாளி தனது குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்கும், தண்டனைக்கு மனதளவில் தயாராவதற்காகவும் இந்த கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. அந்த சமயத்தில் சிறையில் மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

கைதி உயில் ஏதாவது எழுத விரும்பினால், அதற்கு அனுமதி கொடுக்கப்படும். இதில், அவர் தனது கடைசி விருப்பத்தை எழுதலாம்.

குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில் ஒரு பூசாரியோ, மத குருவோ அல்லது பாதிரியாரோ அங்கு இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டால், சிறை கண்காணிப்பாளர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய கைதி சிறப்பு வார்டின் பிரத்யேக செல்லில் தனிமையில் வைக்கப்படுவார்.

இந்தியாவில் ஏன் நிறைய மரண தண்டனை விதிக்கப்படுகிறது?
தூக்கு கயிறுகள் தயாரித்துக் கொடுத்த சிறை: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கா?
மரண தண்டனையை நிறைவேற்றும் முழுப் பொறுப்பும் சிறைக் கண்காணிப்பாளருக்கானது. தூக்கு மேடை, கயிறு, முகமூடி உள்ளிட்ட அனைத்தும் தயாராக இருப்பதை அவர் உறுதி செய்ய வேண்டும். தூக்கு மேடையில் பலகை சரியாக பொருத்தப்பட்டிருப்பதையும், தூக்கு தண்டனை நிறைவேற்ற பயன்படுத்தும் நெம்புகோலில் எண்ணெய் ஊற்றப்பட்டிருக்கிறதா, சரியான நிலையில் இருக்கிறதா, கயிறு நல்ல நிலையில் இருக்கிறதா என்பதையும் அவர் சரி பார்க்க வேண்டும்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு முந்தைய நாள் மாலை, தூக்கு மேடை மற்றும் கயிறுகள் மீண்டும் சோதிக்கப்படுகின்றன. கைதியின் எடையை விட ஒன்றரை மடங்கு எடையுள்ள மணல் மூட்டையை அந்தக் கயிறில் தொங்கவிட்டு பரிசோதிப்பார்கள்.

மரண தண்டனை நிறைவேற்றுபவர், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சிறைக்கு வந்து அங்கேயே தங்கியிருப்பார்.
தூக்கு தண்டனை நிறைவேற்றும் நேரம்
தூக்கு தண்டனை வழக்கமாக காலை வேளையில்தான் நிறைவேற்றப்படும்.
சிறைக் கண்காணிப்பாளரும், சிறையின் துணைக் கண்காணிப்பாளரும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கைதியின் செல்லுக்குச் செல்வார்கள்.

மரண உத்தரவில் இருக்கும் கைதியை கண்காணிப்பாளர் முதலில் அடையாளம் காண்பார். பின்னர் கைதியின் தாய் மொழியில் வாரண்டை படித்துக் காட்டுவார்கள்.
அதன் பிறகு, கண்காணிப்பாளர் முன்னிலையில், குற்றவாளிகள் சொல்வது பதிவு செய்யப்படும். பின்னர் கண்காணிப்பாளர் தூக்கிலிட வேண்டிய இடத்திற்கு செல்வார்.

துணை கண்காணிப்பாளர் செல்லில் இருப்பார். அவர் முன்னிலையில் குற்றவாளிக்கு கருப்பு நிற ஆடைகள் அணிவிக்கப்படும். குற்றவாளியின் கைகள் அவரது முதுகுக்கு பின்னால் கட்டப்படும். காலில் விலங்குகள் போடப்பட்டிருந்தால், அவை அகற்றப்படும்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் தருணம்
இதற்கு பிறகு குற்றவாளி தூக்கு மேடையை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார். அந்த நேரத்தில், குற்றவாளியோடு சிறையின் துணைக் கண்காணிப்பாளர், தலைமை வார்டன் மற்றும் ஆறு வார்டன்கள் அங்கு இருப்பார்கள். குற்றவாளியின் முன்னும் பின்னும் தலா இரண்டு வார்டன்களும், இரண்டு பக்கங்களிலும் தலா ஒரு வார்டனும் நடப்பர்கள். குற்றவாளியின் இருபுறமும் நடக்கும் வார்டன்கள் அவரின் கைகளை பிடித்திருப்பார்கள்.

குற்றவாளி தூக்கு மேடைக்கு செல்லும்போது, அங்கு, சிறை கண்காணிப்பாளர், மாஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் ஏற்கனவே அங்கு இருப்பார்கள்.
கைதியின் அடையாளம் சரி பார்க்கப்பட்டதாகவும், அவருடைய தாய்மொழியிலேயே வாரண்டை படித்துக் காட்டியதகவும் சிறைக் கண்காணிப்பாளர் மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறுவார்.

இதற்கு பிறகு, தூக்கு தண்டனை நிறைவேற்றுபவரிடம் கைதி ஒப்படைக்கப்படுவார்.

இப்போது குற்றவாளி தூக்கு மேடையில் ஏற வேண்டும். தூக்குக் கயிறு தொங்கும் இடத்திற்கு நேர் கீழ்பகுதியில் அவர் நிற்க வைக்கப்படுவார். அதுவரை, சிறைக் கண்காணிப்பாளர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பார்.
இதற்குப் பிறகு, மரண தண்டனை நிறைவேற்றுபவர், கைதியின் இரு கால்களையும் இறுக்கமாகக் கட்டியபிறகு, முகத்தில் முகமூடியையும் போடுவார். இதன்பிறகு தூக்குக் கயிறு கழுத்தில் போடப்படும்.

இப்போது, கைதியை பிடித்துக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் அங்கிருந்து நகர்ந்து வந்துவிடுவார்.

‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகளை பிடித்தது எப்படி?: அதிகாரி பகிரும் சுவாரஸ்ய தகவல்கள்
யார் இந்த பில்லா, ரங்கா? இவர்கள் தூக்கில் போடப்பட்டது எப்படி?
இதன் பிறகு சிறைக் கண்காணிப்பாளர் சைகை காட்டியவுடன், தூக்கு தண்டனை நிறைவேற்றுபவர் (ஹேங்மேன்) நெம்புகோலை இழுப்பார்.
இப்போது, தூக்கு மேடையில், கைதி நின்றுக் கொண்டிருக்கும் இரு பலகைகள் நகர்ந்ததும், கைதியின் காலின் கீழ் ஏற்படும் வெற்றிடத்தால் உடல் அந்தரத்தில் தொங்கும்.

தூக்குக்கயிறு குற்றவாளியின் கழுத்தை இறுக்கத் தொடங்கும். சற்று நேரத்தில் கைதி இறந்து விடுவார்.

உடல் அப்படியே அரை மணி நேரம் தொங்கிக் கொண்டிருக்கும். அரை மணி நேரம் கழித்து, மருத்துவர் பரிசோதித்த பிறகு மரணத்தை அறிவிப்பார்.
அதன் பிறகு, தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் சடலம் கழற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

மரண தண்டனை நிறைவேற்றப்படும் செயல்முறை நிறைவடைந்தது என்பதை மரண உத்தரவு ஆவணத்தில் எழுதும் சிறைக் கண்காணிப்பாளர் அதை திருப்பி அனுப்புவார்.

Nirbhaya Case: தூக்கு கயிறுகள் எப்படி தயாராகின? விலை?

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட உடனே, சிறைக் கண்காணிப்பாளர் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அறிக்கை அளிப்பார். உத்தரவை நிறைவேற்றியதாக சிறைக் கண்காணிப்பாளர் எழுதிய மரண உத்தரவு, அதை பிறப்பித்த நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்படும்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, குற்றவாளியின் சடலம் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்கள் ஏதேனும் இருந்தால், சிறை கண்காணிப்பாளரின் முன்னிலையிலேயே சடலம் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும்.

பொது விடுமுறை நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(டெல்லியின் சிறைக் கையேடு மற்றும் திகார் சிறையின் முன்னாள் ஜெயிலர் சுனில் குப்தாவுடனான உரையாடல் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சுனில் குப்தாவின் பதவிக் காலத்தில், ரங்கா- பில்லா, கர்தார் சிங்-உஜ்கர் சிங், சத்வந்த் சிங்-கெஹர் சிங், மக்பூல் பட், அஃப்சல் குரு என எட்டு குற்றவாளிகளின் மரணதண்டனை உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *