2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பு!

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று(14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைகள்:

வரி செலுத்தப்படாமை அல்லது வேறு காரணங்களுக்காக இலங்கை சுங்கத்தால் தடுத்துவைக்கப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட வரி மற்றும் தண்டப்பணம் செலுத்தப்படுவதன் கீழ் விடுவிக்க யோசனை

2022/24 ஆம் ஆண்டு பருவ காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் நீண்ட கால திறமை அடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்வதனை 40 இலிருந்து 50 வீதம் வரை படிப்படியாக உயர்த்த யோசனை

வறிய பிரதேசங்களில் அமைந்துள்ள 1000 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதி

சிறைச்சாலை கைதிகளின் கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக விதிக்கப்படும் கடவுச்சீட்டு கட்டணம், விசாக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்களை அதிகரிக்க யோசனை

வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இளைஞர், யுவதிகளை பயிற்றுவிக்க தேசிய இளைஞர் மன்றத்திற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மதுபானங்களின் தரம் குறித்து பரிசோதிப்பதற்காக ஆய்வுகூடமொன்றை நிறுவ 100 மில்லியன் ஒதுக்கீடு

ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து உத்தேச சுகாதார மற்றும் காப்புறுதிக்காக நிதி ஒதுக்குவதற்காக ஊழியர் பொறுப்பு நிதிய சட்டமூலத்தை மறுசீரமைக்க யோசனை

வரி அறவிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவை ஸ்தாபிக்க யோசனை

பிரஜைகளின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக தனிப்பட்ட தகவல்களை தயாரிக்கும் பிரிவிற்கு தகவல்கள் பாதுகாப்பு அதிகார சபையை ஸ்தாபிக்க யோசனை

10 விவசாய முயற்சியாண்மை கிராமங்களை ஸ்தாபிக்க யோசனை

மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வௌிநாட்டு உதவிகள் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்புடன் மத ஸ்தலங்களுக்கு சூரிய மின்கலங்களை வழங்க யோசனை

குடிநீர் போத்தல்களுக்கு பாதுகாப்பு முத்திரையை அறிமுகப்படுத்தவும் பின்தொடரவும் யோசனை

பதுளை, குருணாகல் மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளை போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்த நடவடிக்கை

பருவநிலை மாற்றம் தொடர்பாக சர்வதேச பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க திட்டம். ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இலங்கை விமான சேவைகள் நிறுவனம், ஶ்ரீ லங்கா டெலிகொம், கொழும்பு ஹில்டன் ஹோட்டல், வோட்டர்ஏஜ், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் அவற்றின் நிர்வாகத்தை மறுசீரமைக்க நடவடிக்கை

2023 ஆம் ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு குறிப்பிடத்தக்களவு நிவாரணம் அளிக்க எதிர்பார்ப்பு

அரசாங்க வைத்தியசாலைகளில் வாட்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் முறைமையை மீள நடைமுறைப்படுத்த யோசனை. தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் முதல் கட்டம்

விசேட பிரிவுகளை தவிர பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் 18 வருட சேவைக் காலத்தின் பின்னர் ஓய்வு பெறுவதற்கு இடமளிக்க யோசனை

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தொழிலை இழக்கும் பட்சத்தில் 03 மாத கொடுப்பனவு வழங்கக்கூடிய காப்புறுதி மற்றும் காப்புறுதி நிதியத்தை ஸ்தாபிக்க யோசனை

கஞ்சா செடிகளை ஏற்றுமதிக்காக மாத்திரம் பயிரிடும் இயலுமை குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட குழுவை நியமிக்க யோசனை

பொருளாதாரம் – ஊழியர்கள் ஆகிய இரு தரப்புகளும் அனுகூலம் பெறும் வகையில் புதிய தொழில் சட்டத்தை அமுல்படுத்த யோசனை

பயன்படுத்தப்படாத காணிகளை ஏற்றுமதி பயிர்ச்செய்கைக்காக வழங்கவும் விவசாய நிலங்களை குத்தகைக்கு கொடுப்பதனை இலகுவாக்கும் விதத்தில் புதிய சட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க யோசனை

நுண்கடன் வசதியை பெற்றவர்களை பாதுகாக்கும் நோக்குடன் நுண்கடன் மற்றும் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்

நீர் சறுக்கல் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு யோசனை

பீடிக்கு 2 ரூபா வரி அறவிட யோசனை

கறுவா கைத்தொழில் துறையை முன்னேற்றுவதற்காக தனியான திணைக்களம் ஒன்று நிறுவப்படவுள்ளது

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் 75 மாணவ, மாணவிகளுக்கு வௌிநாடுகளில் பட்டப்படிப்பு மேற்கொள்ள புலமைப்பரிசில்

வௌிநாட்டு நிறுவனங்களை கவர்ந்திழுப்பதற்காக மேல், வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையில் புதிய பொருளாதார வலயங்களை உருவாக்க யோசனை முன்வைக்கிறேன்

7 தொடக்கம் 8 வீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி

தனியார் துறையில் முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும். புதிய முயற்சியாண்மையாளர்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை புதிய கோணத்தில் கட்டியெழுப்ப முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *