அழிவை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான அண்டார்டிக்காவின் A-76A அதன் முடிவை நோக்கி நகர்ந்து வருவதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி அறிவியல் மையம் செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பனிப்பாறை என்றால் என்ன?

பொதுவாக கருதப்படுவது போல் பனிப்பாறைகளும், கடல் பனியும் ஒன்றல்ல, பனிப்பாறைகள் என்பது பனி அலமாரிகளின் மிதக்கும் துண்டங்கள், கடல் பனி என்பது கடலின் நீரின் மேற்பரப்பில் உறைந்து காணப்படும் மிதக்கும் உறைந்த கடல் நீர் ஆகும்.

மோசமான காலநிலை மாற்றங்களால் மிகப்பெரிய பனி பாறைகள் கூட உருகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனவ

நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படம்

நாசா(NASA) சமீபத்தில் அண்டார்டிக் பனிப்பாறையான A-76A இன் செயற்கைக்கோள் படத்தை பகிர்ந்துள்ளது.

இந்த பனிப்பாறை ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய துண்டு என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போது இந்த பனிப்பாறை அதன் முடிவை நோக்கி நகர்ந்து வருவதாக நாசா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்டார்டிக் பனிப்பாறை A-76A ஐ சந்தியுங்கள், இது ஒரு காலத்தில் மிகப்பெரிய மிதக்கும் பனிப்பாறையில் எஞ்சியிருக்கும் மிகப்பெரிய துண்டு.” என்று குறிப்பிட்டுள்ளது.

அழிவை நோக்கி நகரும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை: நாசா செயற்கைக்கோள் புகைப்படங்களால் அதிர்ச்சி | Worlds Biggest Iceberg Nasa Share Satellite Image

A-76A பனிப்பாறையின் வரலாறு

இந்த A-76 பனிப்பாறை மே 2021ம் ஆண்டு அண்டார்டிக்காவின் அதன் தாய் பனிப்பாறையான ரோன் ஐஸ் ஷெல்ப்பில் இருந்து உடைந்தது.

அப்போது இந்த A-76 பனிப்பாறையே உலகின் மிகப்பெரிய பனிப்பாறை துண்டாக கருதப்பட்டது, ஆனால் இந்த பனிப்பாறை மூன்று துண்டுகளாக உடைந்த போது மிகப்பெரிய பனிப்பாறை என்ற அதன் நிலையை இழந்தது.

இந்த பனிப்பாறை உருகுமா?

மூன்றாக உடைந்த பனிப்பாறை துண்டுகளில் மிகப்பெரிய துண்டான ஐஸ்பெர்க் A-76A இப்போது, டிரேக்(Drake) பாதையில் கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர்கள் (1,200 மைல்கள்) தொலைவில் நகர்கிறது. 

இந்தப் பாதையானது தென் அமெரிக்காவின் கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவின் தெற்கு ஷெட்லாண்ட் தீவுகளுக்கு இடையே உள்ள கொந்தளிப்பான நீர்நிலை ஆகும். அத்துடன் அவை பெரும்பாலும் வடக்கே பூமத்திய ரேகையை நோக்கி நகர்ந்து, அப்பகுதியின் வெப்பமான நீரில் விரைவாக உருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *