மனைவி கர்ப்பம் தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கையரின் சோக பின்னணி!

தென்கொரியாவில் இடம்பெற்ற நிகழ்வில் உயிரிழந்த இலங்கை இளைஞன் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் தனது தோளில் பெரும் குடும்பச் சுமையுடனையே தென்கொரியாவுக்கு சென்றுள்ளார்.

“பாத்திமாவுடன் எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் கடந்த ஜுலையில்தான் திருமணம்,கருவுற்ற நிலையில் மனைவி. புற்றுநோய் பாதித்த தாயார், நீரிழிவு நோயாளியான தந்தை என இப்படியான குடும்பப் பின்புலம் அவனை வருமானம் தேடி வெளிநாட்டுக்கு விரட்டியது. 

May

ஜினத் சியோலுக்கு வந்து தொழில் தொடங்கியதும் மனைவி பாத்திமாவை அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றுக்கு அழைத்துப் படிப்பிப்பதற்கான முயற்சிகளைத் தொடக்கியிருந்தார். தாயின் புற்றுநோயைக் குணப்படுத்துவதும் வீடு ஒன்றைக் கட்டுவதும் அவரது கனவாக இருந்தது. ஆனால் அவை அனைத்துமே அந்தக் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலைந்து போயின” ஜினத்தின் நண்பர்களும் அவருடன் தொழில் புரிகின்றவர்களும் இந்தத் தகவல்களை  கொரிய ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

ஜினத்தைப் போலன்றி உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காகச் சியோல் நகருக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டு இளைஞர், யுவதிகள் பலரும் கூடத் தங்கள் பதின்ம வயதுக் கனவுகளுடன் உயிர்துறந்திருக்கின்றனர். 

ஜினத் எவ்வாறு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றான் என்பது நண்பர்களுக்குப் புரியவில்லை. இரவு விடுதிகள் அமைந்த அந்தப் பகுதிக்குச் செல்லும் வழக்கம் எதுவும் அவனிடம் கிடையாது. 

May

சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேலாகியும் அவர் இருப்பிடம் திரும்பாததை அடுத்து அவரது கையடக்க தொலைபேசிக்கு ஏராளமான அழைப்புக்கள் எடுக்கப்பட்டன. 

எதற்கும் பதில் இல்லை. தகவல்களை அறியும் நிலையங்களுடன் தொடர்பு கொண்ட நண்பர்களுக்குப் பொறுங்கள் என்ற பதில் மட்டுமே கிடைத்தது. மறுநாள் நகரில் உள்ள நிலக் கீழ் ரயில் நிலையம் ஒன்றில் அவரது கைத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன்பிறகு சியோலில் உள்ள அலங்கை சமூகத்தினர் அவன் அங்குள்ள மருத்துவமனை (Boramae hospital) ஒன்றில் இருக்கிறார் என்ற தகவலைத் தெரிவித்தனர். ஆனால் அங்கு அவர் உயிருடன் இல்லை என்பது பின்னரே தெரியவந்தது. 

ஜினத்தின் உடலை எப்படியாவது என்னிடம் சேர்த்து விடுங்கள் என்று அவரது இளம் மனைவி கெஞ்சுகிறார் என்ற தகவலை இலங்கையில் உள்ள உறவினர் ஒருவர் சியோல் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறார்.

சடலத்தை நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளுக்காக சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் அவனது நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *