இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை 400 வீதம் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சில மருந்துகளின் விலை 300-400 வீதம் அதிகரித்துள்ளதால் மருந்துகளுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துமாறு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்தன கங்கந்த கோரிக்கை விடுத்துள்ளார்.விலை சூத்திரத்தை விதிப்பது மருந்து அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இதற்காக சுகாதார அமைச்சர் மருந்துகள் அதிகாரசபை அதிகாரிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் கங்கந்த தெரிவித்தார்.
தற்போது சுமார் 1200 வகையான மருந்துகள் உள்ளதாகவும், ஆனால் 100 மருந்துகளுக்கு மட்டுமே விலைக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மருந்துப் பொருட்களின் விலையை 29 வீதம் மற்றும் 40 வீதத்தால் இரண்டு தடவைகள் அதிகரிக்க அரசாங்கம் அனுமதித்ததையடுத்து மருந்துகளின் விலை 81 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட சில மருந்துகளின் விலை 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். .
இறக்குமதியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் ஆகிய மூன்று தரப்பினரின் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மருந்து விலை தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இறக்குமதியாளர் அதிக விலைக்கு மருந்தின் விலையை அதிகரிப்பதாகவும் கங்கந்த மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *