Microsoft நிறுவனம் ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது!

Microsoft நிறுவனம், இந்த வாரம் அதன் சில பிரிவுகளில் சுமார் 1,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பொருளியல் மெதுவடைந்துவருகின்றது. இந்த நிலையில், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனம் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன் ஒட்டுமொத்த ஊழியரணியில் சுமார் ஒரு வீதத்தில் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தக முன்னுரிமைகள் அப்போதைக்கு அப்போது மதிப்பீடு செய்யப்பட்டு, சில மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.

இருப்பினும் வளர்ச்சிவாய்ப்புகள் உள்ள துறைகளில் அடுத்த ஆண்டு வேலைக்கு பணியாளர்களை எடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளது.

Meta, Twitter உள்ளிட்ட வேறுசில தொழில்நுட்ப நிறுவனங்களும் அண்மை மாதங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *