மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.24 கோடியை தாண்டியது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.48 கோடியை தாண்டியுள்ளது.  இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28 கோடியே 48 லட்சத்து 71 ஆயிரத்து 603 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 24 லட்சத்து 197 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 38 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,433 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 4,64,135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,286 பேர் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 1,666 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் 7வது இடத்தில் உள்ளது.பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 2,08,099 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 95,34,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 184 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 1.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் 1,83,037 பேரை பாதித்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,25,59,926 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  – பாதிப்பு – 54,656,724, உயிரிழப்பு –  844,169, குணமடைந்தோர் – 41,408,253
இந்தியா   –    பாதிப்பு – 34,814,271, உயிரிழப்பு –  480,592, குணமடைந்தோர் – 34,251,292
பிரேசில்   –    பாதிப்பு – 22,263,834, உயிரிழப்பு –  618,870, குணமடைந்தோர் – 21,414,318
இங்கிலாந்து- பாதிப்பு – 12,559,926, உயிரிழப்பு – 148,089, குணமடைந்தோர் – 10,229,561
ரஷ்யா            – பாதிப்பு –  10,458,271, உயிரிழப்பு – 307,022, குணமடைந்தோர் – 9,380,223

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *