இலங்கையில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக குறைந்தது!
இலங்கையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (20) அமுலுக்கு வரும் வகையில் இந்தவிலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1080 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.