நிதி நெருக்கடி ராஜபக்ச குடும்ப பயணத்தின் இறுதி முடிவாக அமையலாம்!

இலங்கை அரசியலில் ஒரு தசாப்தத்திற்கும் மேல் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சாக்களுக்கும் இது முடிவின் தருணமா?
நிதி விடயங்களை உரிய முறையில் நிர்வகிக்காதது இலங்கையின் பொருளாதாரம் கிட்டத்தட்ட செயல் இழந்துள்ளது போன்றவற்றால் வீதிகளில் காணப்படும் சீற்றத்தினை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது ராஜபக்சாக்களின் நிறுவனம் செயல் இழக்கின்றது.

கோ பக் கோத்தா என்ற சுலோகங்களையும் பதாகைகளையும் முன்னர் அவர்களை நாட்டின் வீர புருசர்கள் என போற்றியவர்களின் கரங்களில் காணமுடிகின்றது.

எண்ணை விலைகள் மேலும் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ள ரஸ்ய உக்ரைன் மோதல் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அந்நியசெலாவணி பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பெட்ரோல் முதல் சமையல் எரிவாயு மருந்துகள் அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் உட்பட அனைத்திற்கும் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் செழிப்பான தலைநகரமான கொழும்பு தற்போது காலியான அலமாரிகளும்  நீண்ட வரிசையில் மக்கள் காணப்படும் நகரமாக மாறியுள்ளது.

பல்பொருள் அங்காடிகள் காலியாக காணப்படுகின்றன, பொதுமக்கள் பாண்கள் போன்றவற்றிற்கு கூடநீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

பெட்ரோல் மண்ணெண்ணை விற்பனை நிலையங்களில் விநியோகங்களை மேற்பார்வை செய்வதற்கு இராணுவத்தை பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
நீண்டநேரம் வரிசையில் காத்திருந்ததால் மூன்று முதியவர்கள் உயிரிழந்தை தொடர்ந்து இராணுவத்தை பயன்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

சிறிதளவு பெட்ரோலை பெறுவதற்காக பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கின்றனர்- இலகுவில் கோபமடையும் – வரிசைகளில் காத்திருக்கும் சாரதிகள் தங்களை போன்ற களைப்படைந்த கோபக்கார கார்சாரதிகளுடன் கைகலப்பில் ஈடுபடுகின்றனர்.

இது பொதுமக்களிற்கு மிகவும் அச்சம் தரும் நிலைமையாக காணப்படுகின்றது- மார்ச் ஐந்தாம் திகதி முதல் மின்சார நெருக்கடி முடிவிற்கு வரும் என அரசியல் தலைமை வாக்குறுதி அளித்திருந்த போதிலும் நாளந்தம் ஐந்து முதல் ஏழு மணித்தியாலங்கள் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது
  
இலங்;கையில் நாங்கள் நிச்சயமற்றதன்மை அச்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்- எங்கள் நிச்சயமற்ற தன்மைகளின் பட்டியல் அதிகரிக்கின்றது –விரைவில் நாங்கள் பால்மா அரிசி காய்கறி  இல்லாத நிலையை எதிர்கொள்ளவேண்டிவரும், மின்சாரமும் எரிபொருளும் கிடைக்குமா?சமையல் எரிவாயு கலவையில் மாற்றங்களை மேற்கொண்டதால் வெடிப்பு நிகழுமா? போதியளவு மருந்துகள் கிடைக்குமா இப்படி எங்கள் பட்டியல் நீள்கின்றது என்கின்றார் சமந்த மென்டிஸ் – பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கொழும்பில் ஆடம்பர பகுதியொன்றில் தான் பார்த்ததை அவர் இவ்வாறு வர்ணிக்கின்றார்.

பிளவர் வீதியில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக்கு சென்றவேளை நான் சமையல்எரிவாயு சிலிண்டர்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்த்தேன் – என்ன நடக்கின்றது என பார்த்தவேளை எனது கண்களின் எல்லைவரை சமையல்எரிவாயு சிலிண்டர்களை பார்த்தேன்,காலை ஆறு மணிக்கு வந்தவர்கள் மதியம் ஒரு மணிவரை காத்திருந்தனர்,இது என்றோ ஒரு நாள் நிகழும் விடயமில்லை- நாளாந்தம் நாங்கள் பார்க்கும் விடயம்,நான் ஒரு இளம் சட்டத்தரணியுடன் பேசினேன் அவர் தான் சமையல் எரிவாயு லொறியொன்றை துரத்திச்சென்று சிலிண்டரை வேண்டியதாக தெரிவித்தார். நாட்டின் மூலோபாய சிந்தனையின்மையின் பலவீனமே இதற்கு காரணம் என்கின்றார் அவர் ( அவுட்லுக் சீமா குதா) .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *