இலங்கை அணியை அச்சுறுத்திய யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

சரித்திரத்தில் பதிவான மற்றுமொரு தமிழ் நாமம் என்ற அந்தஸ்துக்கு சொந்தக்காரராக மாறியுள்ள தமிழர் பற்றி இன்று உலகமே பேசிக்கொண்டிருக்கையில் நாமும் அவரைப்  பற்றி பேசுவது  பொருத்தமாக  இருக்கும் என்று கருதுகின்றோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் சாதனைப் புத்தகத்தில் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் வரலாற்றிலும்  தடம் பதித்துள்ள கிரிக்கெட் வீரன் கார்த்திக் மெய்யப்பன தமிழர் என்பதில் நமக்கு பெருமையாகவுள்ளது.

தற்போது அவுஸ்திரேலியாவில்  நடைபெற்றுவரும் ICC உலகக்  கிண்ண  இருபதுக்கு  இருபது கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்பில் கலக்கிக்கொண்டிருக்கும் கார்த்திக் மெய்யப்பன் இந்தியாவின் தமிழகத்தின் சென்னையை பிறப்பிடுமாகக் என்பதுடுன்  பின்னர்  குடும்பத்துடுன்  ஐக்கிய  அரபு இராச்சியத்தில் வசிப்பவர் ஆவார். 

I

வலது கை பந்து வீச்சாளரான மெய்யப்பன் கார்த்திக் 2000ம் ஆண்டு  ஒக்டோபர் மாதம் 8ம் திகதி பிறந்தவர்   என்பதுடன் 2019ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில்  விளையாடிவருகின்றார்.

சர்வதேச   கிரிக்கெட் போட்டி ஒன்றில்   “ஹெட்ரிக்” அதாவது தொடுர்ந்து 3 பந்துகளில் 3 விக்கட்க ளைக்  கைப்பற்றுவது என்பது மிக இலகுவான விடயம்  அல்ல  என்பதுடன்  இதுவரையில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே அந்த  சாதனையை  நிகழ்த்தியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் ஜிலோங் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போடுடியில், பானுக்க ராஜபக்ஸ, சரித் அசலங்க, தசுன் சானக்க ஆகியோரை  ஆட்டமிழக்க  செய்ததன் மூலம் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் நமக்கும்  பெருமை  சேர்த்துள்ளார்.

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது  கிரிக்கெட் போடுடியில் ஹெட்ரிக்  சாதனை படைத்த  5 ஆவது வீரராகவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதல் வீரராகவும் கார்த்திக் மெய்யப்பன் திகழ்கின்றார். 

Sri

இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்களை கார்த்திக் மெய்யப்பன் கைப்பற்றியிருந்தமை  குறிப்பிடுத்தக்கது.

2019ம்  ஆண்டு  சர்வதேச  கிரிக்கெட்டில்  பிரவேசித்த  கார்த்திக்  மெய்யப்பன்  19  வயதுக்குட்பட்ட ஐக்கிய  அரபு  இராச்சிய  கிரிக்கெட் அணியின்  தலைவராகவும் செயற்படுடிருந்தார்.

அயர்லாந்துக்கு  எதிராக நடைபெற்ற சர்வதேச இருபதுக்கு  இருபது  கிரிக்கெட் போட்டியே  அவரது முதலாவது இருபதுக்கு இருபது சர்வதேச போட்டியாகும்.

டெஸ்ட் அந்தஸ்து  பெற்ற  அணிக்கு  எதிராக  டெஸ்ட் அந்தஸ்து  பெறாத  ஒரு  அணியை  சார்ந்த ஒரு  வீரர்  பெற்றுக்கொண்டு  முதலாவது  ஹெட்ரிக் சாதனை  இதுவென்பது  சிறப்பம்சமாகும்.

இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் முதலாவது ஹெட்ரிக் சாதனையை அவுஸ்திரேலிய அணியின் பிறெட் லீ பங்களாதேஸ் அணிக்கு  எதிராக  நிகழ்த்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *