தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கம் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கையில் புலம்பெயர்ந்த 6 அமைப்புகளின் தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத தடுப்பு சாசனத்தின்படியே இந்த நீக்கம் மேற்கொள்ள்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் தீர்மானங்கள் 1758/19 இன் படி,பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்கீழ், அமைப்புக்கள் மீதான தடைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, அவர், வெளியுறவு அமைச்சகம், சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு பிரிவுகள், சட்ட நடைமுறை நிறுவனங்கள் மற்றும் மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு குழுவை நியமித்திருந்தார்.

இந்த குழுவினர் பல ஆண்டுகளாக புலம்பெயர் அமைப்புக்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தமையை கண்டறிந்து அவற்றைத் தடைசெய்வதற்கான பரிந்துரைகளை வழங்கினர்.

அத்துடன் ஆறு நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்குவது தொடர்பான கண்காணிப்பையும் அவர்கள் இந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்ததாக ஜனாதிபதி அலுவலகத்தின அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படியே உலகத் தமிழர் பேரவை, அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை, உலகளாவிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் கனேடியத் தமிழர் காங்கிரஸ் ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்றும் இலங்கை ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *