ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாம?

பெண்களை விட ஆண்கள் தான் அதிக நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு அவர்களது வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம்.

ஆண்கள் தங்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தினால், நிச்சயம் வாழ்நாளின் அளவை அதிகரிப்பதோடு, நோயின்றி சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்.

அது மட்டும் இல்லை. ஆண்களின் வாழ்க்கையில் அற்புதம் செய்யும் உணவுகளில் விளாம்பழமும் ஒன்று.

விளாம்பழத்தின் நன்மைகள்
விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. சிறிது சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் கலந்து சாப்பிட்டால் உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.  

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

பனங்கற்கண்டுடன் விளாம்பழத்தை சாப்பிட, பித்தக் கோளாறுகளால் உண்டாகும் வாந்தி, தலைச் சுற்றல் தீரும்.

தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். விளாம் மரத்தின் இலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விளாம் மரத்தின் பிசினை அடிக்கடி சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும். 

ஆண்கள் விளாம்பழத்தினை சாப்பிடலாமா?
விளாம்பழத்துக்கு ரத்தத்தின் மூலம் கலக்கின்ற நோய்க் கிருமிகள் மற்றும் நோய் அணுக்களைச் சாகடிக்கின்ற திறன் உண்டு.

எந்த நோய்க் கிருமிகளும் ரத்தத்தில் பரவாமல் தடுக்கும். அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, பசியைத் துண்டவும் விளாம்பழம் உதவுகிறது.

நரம்புத் தளர்ச்சி பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு விளாம்பழம் மிகச் சிறந்த தீர்வாக அமையும்.

அதேபோல், உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாடு, தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி, சருமத்தில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த மருந்தாக விளாம்பழம் இருக்கும்.

பாம்புக் கடியின் வீரியத்தைக் கூட குறைக்கும் பேராற்றல் இந்த விளாம்பழத்துக்கு உண்டு.

விளாம்பத்தின் ஓட்டினைப் பொடி செய்து, அதில் உணவிலோ அல்லது பாலிலோ கலந்து குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் நீா்த்துப் போகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *