இரத்த சோகையை முற்றிலும் குணமாக்கும் கருப்பு கவுனி அரிசி!

இந்த அரிசியைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விபட்டு இருக்கலாம். இது நூற்றி அறுபது நாட்கள் வயதுடைய நெல் இரகம் ஆகும். கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

◆கருப்பு கவுனி அரிசியின் விசேஷம் என்னவென்றால் இது இரத்த விருத்திக்கு பெரிதும் உதவும்.

◆கருப்பு கவுனி மட்டும் அல்லாமல் கருப்பாக இருக்கும் அனைத்து அரிசிக்கும் இந்த சிறப்பு உண்டு.

◆அதே போல கருப்பு நிற அரிசியில் ஆன்டிபயாடிக் அதிக அளவில் இருக்கும்.

◆இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது உடல் வலுவடையும்.

◆இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த அரிசியை எடுத்து வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

◆நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு கவுனி அரிசி பரிந்துரைக்கப்படுகிறது.

◆இந்த அரிசி விரைவில் செரிமானம் ஆகி விடும் என்பதால் செரிமான கோளாறுகள் இருப்பவர்களுக்கு உகந்த அரிசி இது.

பொதுவாக நாம் அரிசி என்று எடுத்து கொள்ளும் போது அது உமி, தவிடு, அரிசி மீது இருக்கும் கோட்டிங் மற்றும் மாவுச்சத்து கொண்ட அரிசி ஆகியவை அடங்கும். அரிசி மீது காணப்படும் அந்த கோட்டிங் தான் மிகவும் சத்து வாய்ந்தது. நவீன முறையில் கண்டுபிடிக்கப்படும் அரிசியில் கோட்டிங் என்பது இருப்பது இல்லை. ஏனெனில் பாலிஷ் செய்யப்படும் போது அந்த சத்தான கோட்டிங் அழிந்து விடுகிறது. ஆகவே நமக்கு கார்போஹைட்ரேட் மட்டுமே கிடைக்கிறது. அதை தான் நாம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். பாரம்பரிய அரிசி இரகங்களில் அரிசி முழுவதிலும் சத்துக்கள் நிறைந்திருக்கும்.

இதற்கு காரணம் பாரம்பரிய அரிசியில் சத்துக்கள் ஊடுருவி இருப்பதே ஆகும். இதனால் எப்போதுமே பாரம்பரிய அரிசி வேக கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளும். சீக்கிரமே வெந்து விடும் அரிசி கண்டிப்பாக சத்து மிகுந்த அரிசியாக இருக்காது. எனவே இதை வைத்தே ஒரு அரிசியின் தன்மையை நாம் தெரிந்து கொள்ளலாம். எனவே பாரம்பரிய அரிசியை நாம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். அதையும் ஆர்கானிக் முறையில் விளைவித்து சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசிக்கு மாறுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *