மனைவியை 1400 கி.மீ. பயணம் செய்து கொலை செய்த கணவன்!

பாகிஸ்தானை சேர்ந்த ரஹீல் அகமது என்பவர் டிக்-டாக்கில் விவாகரத்து குறித்து பதிவிட்ட தனது முன்னாள் மனைவியை கொல்ல 1400 கிமீ பயணம் செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு குடிபெயர்ந்த பாகிஸ்தானிய-அமெரிக்க புகைப்படக் கலைஞர் சானியா கான், 29, தனது கொடூரமான கடந்தகால திருமணம் மற்றும் அங்கு தான் சந்தித்த சிரமங்களை விளக்கும் வீடியோவை டிக்-டாக்கில் பதிவிட்டுள்ளார்.

இதை இணையத்தில் பார்த்த அவரது முன்னாள் பாகிஸ்தான் கணவர் ரஹீல் அகமது (39) கடும் கோபமடைந்து ஜார்ஜியாவில் இருந்து சிகாகோ வரை சுமார் 1400 கி.மீ தூரம் பயணம் செய்து முன்னாள் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ரஹீல் அகமதுவை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவரது முன்னாள் மனைவியை பார்க்க சென்றிருக்கலாம் என்றும் உள்ளூர் சிகாகோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சானியா கானின் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், ரஹீல் அகமது மற்றும் சானியா கான் இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

சானியா கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ரஹீல் அகமது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *