இலங்கையில் உணவு திருட்டு இரு மடங்காக அதிகரிப்பு!

பணவீக்கம் காரணமாக நாட்டில் உணவு திருட்டு ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோட்டங்களில் உணவுப் பொருட்கள் திருடப்படுவது பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், பல வழக்குகள் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் முறையான முறைப்பாடுகளாக தகவல் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், பல்பொருள் அங்காடிகள் உட்பட பல்வேறு வர்த்தக ஸ்தலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உணவுப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவங்கள் அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, கடைகளில் உணவு பொருட்கள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

மேலும், சமைத்த உணவுப் பொருட்கள் (அரிசிப் பாத்திரங்கள் போன்றவை) திருடப்பட்ட பல வழக்குகள் சமீபத்திய நாட்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணவீக்கச் சூழ்நிலை காரணமாக மூன்று வேளைக்கு பதிலாக ஒரு வேளை அல்லது அதிகபட்சம் இரண்டு வேளை உண்ணும் குடும்பங்களின் எண்ணிக்கை பத்து இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *