நாளை நிலைமை மாறலாம் கொழும்பில் குவிக்கப்படும் அதிரடிப்படையினர்!

நாளை மற்றும் நாளை மறுதினங்களில் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

நாளை மற்றும்  நாளை மறுதினம் கொழும்பில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால்  பதற்ற நிலை மற்றும் அவசர நிலை ஏற்படும் என கருதி கொழும்பின் முக்கிய பல இடங்களில்  இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி நாளை நடத்தப்படவுள்ளது.

பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள நடவடிக்கை
மேலும், நாளை மறுதினம் (09) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள பல அமைப்புக்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விகாரமகா தேவி பூங்காவிற்கு அருகாமையில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை பேரணியாக சென்றதன் பின்னர் இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், ஆலயம், பிரதமர் இல்லம், பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொது அமைதியை நிர்வகிக்கவும் விசேட அதிரடிப்படையினருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கட்டளைத் தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடமையில் விசேட அதிரடிப்படையினர்
இப்பணிகளை மேற்கொள்வதற்கு அதிகளவான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பு பிரதேசத்திலுள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை அவசர காலங்களில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *