கணவரை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் மனைவி !

நம் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்.

ஆனால் சிலர் இந்த நவீன உலகில் வாழ்க்கையை நடத்துவதற்காக பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்திச் சம்பாதித்து வருகின்றனர்.

ஏதோ ஒரு கட்டத்தில் சில இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்க வீட்டில் ஏதோ ஒரு பொருள்களை விற்று வாழ்க்கை நடத்தி இருப்பார்கள்.

ஆனால் இங்கு குடும்ப செலவுக்காக மனைவி தன் கணவனையே வாடகைக்கு விட்டுள்ளார். இங்கிலாந்தில் வசித்து வரும் லாரா மற்றும் ஜேம்ஸ் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

ஜேம்ஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வார்ஹவுஸில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அதன் பின்னர் வேலையை விட்டுவிட்டு குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக ஜேம்ஸ் வீட்டில் உள்ள வேலைகள் அனைத்தையும் பார்த்து வந்துள்ளார்.

அப்போது ஜேம்ஸ் மரசாமன்களை பயன்படுத்தி அழகான பொருட்களாக உருவாக்குவதில் திறமையானவர், குறிப்பாகக் குழந்தைகளுக்கான வித்தியாசமான படுக்கைகள் போன்றவற்றைத் தனித்துவமாக வடிவமைத்து தனது வீட்டினை மாற்றியமைத்துள்ளார்.

கணவரின் சில திறமைகளைக் கண்ட லாரா, இதை ஏன் சம்பாதிக்க பயன்படுத்தக் கூடாது? என கணவரை வாடகைக்கு விட்டுள்ளார். இதன் மூலம் இந்த தம்பதிகள் நன்றாகப் பணம் ஈட்டியுள்ளனர்.

இது குறித்துக் கூறும் லாரா, தனது கணவர் ஜேம்ஸ் மர சாமன்கள் மூலம் வீட்டு அலமாரிகள் போன்ற அழகு பொருட்களைச் செய்வதில் திறமையானவர்.

எனவே அவரின் திறமையினை வீணாக்காமல் “ரென்ட் மை ஹேண்டி ஹஸ்பண்ட்” இணையதளத்தைத் தொடங்கியதாகவும் பேஸ்புக் மற்றும் பிரபலமான நெக்ஸ்ட்டோர் செயலியில் விளம்பரம் செய்ததாகவும் கூறினார்.

தற்போது தனது கணவர் ஜேம்ஸ் -ன் திறமையினை வாடிக்கையாளர்கள் பாராட்டுவதாகக் கூறும் லாரா கட்டணங்களைக் குறைந்தபட்சமாக வைத்து, மக்களிடம் நேர்மையாக இருக்க விரும்புகிறோம்.

பட்ஜெட்டில் இருப்பது எப்படி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் எனவே ஊனமுற்றோர், பராமரிப்பாளர்கள், யுனிவர்சல் கிரெடிட்டில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *