வீட்டுக்குள் பாய்ந்த ரஷ்ய ஏவுகணை- கண்டுகொள்ளாது சவரம் செய்த உக்ரைனியர்!

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை வீட்டை துளைத்து நின்ற போதும், அதனை கண்டுகொள்ளாமல் நபர் ஒருவர் முகச்சவரம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 120 நாட்களையும் கடந்து நீடித்து வருகிறது. உயிர், உடைமைகளை இழந்தாலும் உக்ரைன் மக்கள் துணிச்சலுடனும், நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

தினமும் வெடிகுண்டு சத்தம் கேட்பது மக்களுக்கு பழகிவிட்டது. அதற்கு உதாரணமாக நபர் ஒருவர் செய்யும் காரியம் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ரஷ்ய ஏவுகணை ஒன்று வீட்டை துளைத்து சமையல் அறையில் செங்குத்தாக நிற்கிறது. அதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர், பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அதன் அருகிலேயே நின்று கண்ணாடியை பார்த்து முகத்தை சவரம் செய்து கொண்டிருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலர் மிரண்டு போய்விட்டனர். எதையும் எதிர்கொள்ளும் மனநிலைக்கு உக்ரைனியர்கள் வந்துவிட்டனர் என்று கூறிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *