இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற தம்பதிகள் கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்பு!

இலங்கையில் இருந்து அகதிகளாக 2 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் வயதான கணவன், மனைவி ஆகியோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.   இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையில் புதிய அரசு அமைக்கப்பட்டு பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் போதுமான நிதியுதவியை பெற முடியாமல் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலையிலேயே தவித்து வருகிறது.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று இலங்கை திரிவோணமலையை சேர்ந்த வயதான தம்பதியினர் அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் படகோட்டி பாதி கடலில் இறக்கி விட்டுள்ளார்.

தொடர்ந்து இருவரும் நடந்து கரை சேரும் போது வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் மயக்க நிலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடும் குளிரில் வந்ததால் மயங்கிய நிலையில் இருந்த வயதான கணவன், மனைவியை  கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டு முதலுதவி அளித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஏற்கனவே 90 பேர் தமிழகம் வந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் வந்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *