ரணிலை அகற்ற கோத்தபாய போடும் புதிய திட்டம் அம்பலம்!

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுண கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த இணக்கப்பாட்டை வௌிப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய,  பொதுஜன பெரமுண நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூடுதல் ஆதரவைப் பெற்ற ஒருவரின் பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறு அவர் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரில் ஒருவர் விரைவில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று ஆளுங்கட்சியின் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 21ம் திருத்தச் சட்டத்தைக் கைவிடவும் ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது. 

இந்தியப் பிரதமர் மோடியின் வேண்டுகோள் பிரகாரம் அதானி நிறுவனத்துக்கு இலங்கையின் முக்கிய வளங்கள் மற்றும் நிறுவனங்களை தாரை வார்த்துக் கொடுப்பதில் ரணில் விக்ரமசிங்க காட்டிய தயக்கமே அவரது பதவி பறிப்புக்கான காரணமாக அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *