வறுமை காரணமாக இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்று சாதித்த பெண்!

பிரித்தானியாவிற்கு பட்னியுடன் தப்பி சென்ற இலங்கை பெண் இன்று மிகப்பெரிய பதவியில் செயற்படுகின்றார்.

உள்நாட்டு போர் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு புகலிடம் சென்ற பெண் ஒருவரின் அசாத்திய வளர்ச்சி குறித்து பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

8 வயதில் அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த 32 வயதான நிலானி வசந்தராசன் இன்று  மிகப்பெரிய வங்கியின் முகாமையாளராக செயற்பட்டு வருகிறார்.  

Nilany

ஒரு குழந்தை அகதியாக ஒரு லொறியின் பின்புறம்  ஏறியபோது, அவர் பட்டினியால் வாடியுள்ளார். நிலானி தனது 8 வயதாக இருந்த போது இலங்கை போரில் தப்பி பிரித்தானியா வந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவர் தனது தாயார், 7 வயதான சகோதரி மற்றும் 11 வயதுடைய சகோதரருடன் முகவர் மூலம் பிரித்தானியா வந்துள்னர்.   

வேலையில் தரவரிசையில் உயர்ததுடன், நிலானி வேர்ல்ட் விஷன் என்ற தொண்டு நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டு செய்கிறார், மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது அனுபவங்களைப் பற்றி பேசியுள்ளார்.

Nilany

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மொத்தமாக 20 நாடுகளுக்கு சென்று இறுதியாக பிரித்தானியாவை வந்தடைந்தோம். பிரித்தானியாவில் பல நாட்கள் போராடி இன்று ஒரு நிலையை எட்டியுள்ளோம். எங்களை போன்று போராடி பிரித்தானியா வரும் மக்களை சம்பந்தம் இல்லாத நாடுகளுக்கு நாடு கடத்துவது வேதனையாக உள்ளது. அவர்கள் சந்திக்க சூழல் பயங்கரமாக இருக்கலாம்” என நிலானி குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய வந்தவர்கள் முதல் உணவிற்காக பர்மிங்காமிற்கு அருகிலுள்ள ஒரு மோட்டார்வே சேவை நிலையத்திற்குள் நுழைந்த போது பொலிஸாரால் விரட்டியடிக்கப்பட்டனர். 

பிரித்தானியாவிற்குள் நுழைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இன்று மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ள நிலானியின் வாழ்க்கை கதை தொடர்பில் முதல் முறையாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அய்ல்ஸ்பரியில் உள்ள மெட்ரோ வங்கியின் முகாமையாளரான நிலானி, பகுதி நேர வேலைகள் செய்து இரண்டு பட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

Nilany

அவரது குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்ததிலிருந்து, அவர் கடினமாக உழைத்துள்ளார், புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொண்டார். எனது நன்மைக்காக யாரிடமும் ஒரு பவுண்ட் கூட கோரவில்லை என பெருமையுடன் கூற முடியும் என நிலானி ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார். “உள்துறை செயலாளரின் அறிவிப்பை கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன், இலவச பணம் வேண்டும் என்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை” என நிலானி குறிப்பிட்டுள்ளார்.

Nilany

நாங்கள் இங்கு ஒரு நல்ல கல்வியைப் பெறவும், சமூகத்திற்கு பங்களிக்கவும், உண்மையில் எங்கள் சொந்தக் காலில் நிற்கவும், எங்கள் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படவும், இவ்வளவு தூரம் வந்துள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நீண்ட காலமாக நாங்கள் பாதுகாப்பாக இருக்க வந்த நாடாக பிரித்தானியா இருந்தது.  எங்களுக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

Nilany

நாங்கள் சட்ட அமைப்பை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ததில்லை. மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் பங்களிக்கப் போவதில்லை என்று சொல்வது உண்மையில் மனவருத்தத்தை அளிக்கிறது. நான் இங்கு வந்ததிலிருந்து பிரித்தானிய சமுதாயத்திற்கு பங்களித்துள்ளேன் என்று நினைக்க விரும்புகிறேன். அதனால் என் சகோதரன், சகோதரி மற்றும் என் அம்மாவும் உள்ளனர். நாங்கள் எங்கள் வரிகளை செலுத்திவிட்டோம். நாங்கள் பெருமை மிக்க மனிதர்கள். போரில் இருந்து தப்பிக்க ஒரு அகதியாக நான் மாறியமையால் நான் ஒரு அதிரஷ்டசாலியாக உணர்கிறேன். இதை எனது வீடாக பிரித்தானியா அனுமதித்ததற்கு நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *