மொய் பணத்திற்காக அடித்துக்கொண்ட புதுமனத் தம்பதியினர்!

சிங்கப்பூரில் புதிதாக திருமணம் செய்த தம்பதியினர் அவர்களது திருமணத்திற்கு வந்த மொய் பணத்திற்காக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களுக்கிடையே நகை, பணம் போன்ற பல்வேறு சொத்து பரிமாற்றம் நிகழ்வது வழக்கம். சீனர்களின் வழக்கப்படி திருமண தம்பதியரின் பெற்றோர்களுக்கு தேனீர் திருமண சடங்கு நடந்தது.

சடங்கின்போது ஒரு மில்லியன் சிங்கப்பூர் டொலர் மதிப்புள்ள காசோலை அடங்கிய சிவப்புநிற உறையை மணமகனின் தந்தை மணமக்களுக்கு அளித்தார்.

பல் மருத்துவராக பணிபுரியும் மனைவியும், எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகிக்கும் கணவனும் திருமணம் ஆகிய மூன்று ஆண்டுகளிலேயே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

விவாகரத்து வழக்கில் ஒரு மில்லியன் சிங்கப்பூர் டொலர் மொய் பணம் மற்றும் சிங்கப்பூர் ஐலண்ட் கண்ட்ரி கிளப் உறுப்பினர் சலுகை போன்றவற்றிற்காக தம்பதியினர் மோதிக்கொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு ஏழு வயதில் ஒரு மகனும் இருக்கிறார். உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது தனது மகனுக்கு மொய் பணம் சேர வேண்டுமென்று தந்தை வழங்கியிருப்பது முடிவானது.

திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணுக்கு BMW காரையும் மணமகளின் தந்தை வழங்கியுள்ளார்.

மேலும் கணவனிடமிருந்து 100000 சிங்கப்பூர் டொலர் மதிப்புள்ள நகைகளும் மனைவிக்கு கிடைத்துள்ளன.

இந்நிலையில் கணவனுடனான உரையாடலின்போது மொய் பணம் இருவருக்குமே சொந்தமென்று அந்த கணவர் கூறியதை மனைவி ரகசியமாக பதிவு செய்திருந்தார்.

திருமண சொத்துக்கள் மற்றும் விலை மதிப்பிற்குரிய நகை விவரங்கள் குறித்த முழு விவரங்களையும் விசாரித்த நீதிபதி இறுதியாக திருமணம் சார்ந்த சொத்துக்களில் ஒன்றாக மொய்ப்பணம் கருதப்படும் என்று கூறி பணம் இருவருக்கும் திருப்பித் தரப்படும் என்று தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *