பிரான்ஸில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு திண்டாட்டத்தில் மக்கள்!

2022 ஆம் ஆண்டில் பிரான்ஸ் மக்களின்வருடாந்த உணவுச் செலவு ஒரு நபருக்கு 224 யூரோக்கள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பணவீக்கம் காரணமாக, இந்த வாரம் வெளியிடப்பட்ட வர்த்தக ஆய்வின்படி, இந்தத்தகவல் வெளியாகி உள்ளது.

அரசாங்கம் புதிய திட்டத்தை அமைப்பது பற்றி திட்டமிட்டு வரும் நிலையில் பிரான்ஸ் மக்கள் செலவை குறைப்பது குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் நடந்து வரும் போர் பிரான்ஸில் பல மாதங்களாக பாரிய விலைவாசி உயர்வை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதில் மாற்றம் ஏற்படுவது பல மாதங்களாகும் என குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் பணவீக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதற்கு தயாராக வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் உணவு பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும் அந்த விலை அதிகரிப்பை தாங்கிக் கொள்வதற்கு மக்கள் தயாராக வேண்டும் என இன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

யூரோவில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

இறைச்சி விலைகள் 7.0 சதவீதம், கடல் உணவு பொருட்கள் 9.3 சதவீதம், எண்ணெய் விலைகள்1.3 சதவீதமும், தானியங்களின் விலைகள் 5.1 சதவீதமும், சீனியின் விலைகள் 8.1 அதிகரித்துள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும் போது இந்த விலை உயர்வை கவனித்த பிரான்ஸ் மக்கள் பணத்தை மீதப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும் இந்த விலை அதிகரிப்பினால் கடினமான நாட்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *