இறப்பதற்கு முன்பு நம் மூளை என்ன நினைக்கும் தெரியுமா?ஆய்வில் தகவல்

நீங்கள் மரணமடடையும் போது என்ன நடக்கும்? ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்த தகவல்கள்

வேறு ஒரு நோக்கத்திற்காக ஒரு விஞ்ஞான ஆய்வு நடக்கும் போது ஒரு மனிதர் இயற்கையாக மரணமடைகிறார். அப்போது தற்செயலாக கிடைத்த புதிய தரவுகளின் படி இறக்கும் போது வாழ்க்கை நம் கண்களில், மூளையில் ஒளிர்கிறது எனத் தெரிகிறது.

மூளையில் ஒளிரும் வாழ்க்கை
கை-கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளியின் மூளை அலைகளை ஒரு விஞ்ஞானிகள் குழு கண்காணித்து வந்தது. ஆனால் நரம்பியல் நோய் பாதிப்பால் அவர் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். இறக்கும் போது அவர் மூளையில் எதிர்பாராத பதிவுகளை வழங்கினார்.

இறப்பதற்கு முன்னும் பின்னும் 30 வினாடிகளில், மனிதனின் மூளை அலைகள் கனவு காண்பது அல்லது பழைய நினைவுகளை நினைவுபடுத்திப் பார்ப்பதை செய்கிறது.

இந்த வகையான மூளையின் செயல்பாடு ஒரு நபரின் இறுதி தருணங்களில் வாழ்க்கையை கடைசியாக நினைத்துப் பார்ப்பது நிகழலாம் என்று விஞ்ஞானிகள் குழு பரிந்துரைத்திருக்கிறது.

இறப்பதற்கு முன்னும் பின்னும் 30 வினாடிகளில், மனிதனின் மூளை அலைகள் கனவு காண்பது அல்லது பழைய நினைவுகளை நினைவுபடுத்திப் பார்ப்பதை செய்கிறது.

கேள்விகளை எழுப்பும் ஆய்வு
மேலும் இந்த ஆய்வு சில கேள்விகளை எழுப்புகிறது. எப்போது எப்படி வாழ்க்கை முடிகிறது, இதயத்துடிப்பு எப்போது நிற்கிறது அல்லது மூளையின் செயல்பாடு நிற்கிறது என்பதை பரிசீலிக்கிறது.

அதே நேரம் டாக்டர் ஜெம்மரும் அவரது குழுவினரும் ஒரு நோயாளியின் ஆய்வில் இருந்து உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது என்று எச்சரித்துள்ளனர். குறிப்பிட்ட நோயாளி இரத்தப் போக்கு மற்றும் வீங்கிய மூளையுடன், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது விசயங்களை மேலும் சிக்கலாக்குகிறது.

இந்த ஒரு ஆய்வை வைத்து மட்டும் முடிவு எடுப்பதை நான் விரும்பவில்லை என்று கூறுகிறார் டாக்டர் ஜெம்மர். இந்த நோயாளியின் இறப்பு பதிவான 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு இதே போன்ற நிகழ்வுகளை உறுதிப்படுத்த அவர் ஆய்வு செய்ய விரும்பினாலும் அதில் தோல்வியடைந்தார். அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனால் 2013 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வு சில பதில்களை அளிக்கலாம். அதில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் எலிகளின் இதயம் துடிப்பதை நிறுத்துவதற்கு முந்தைய 30 வினாடிகள் வரை மரணத்தின் தருணத்தில் அதிக அளவு மூளை அலைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். இது டாக்டர் ஜெம்மரின் வலிப்பு நோயாளியின் நடத்தையோடு ஒத்துப் போகிறது.

இந்த இரண்டு ஆய்வுகளுக்கிடையிலான ஒற்றுமைகள் வியக்கத்தக்கவை என்கிறார் டாக்டர் ஜெம்மர்.

இந்த ஒரு நோயாளியின் இறுதி தருணம் குறித்த ஆய்வு மற்ற ஆய்வுகளுக்கு கதவைத் திறந்து வாழ்வின் இறுதி தருணங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு உதவலாம்.

இறப்புக்கு அருகில் மர்மமான ஆன்மீகம் போன்ற ஏதோ சில நிகழ்வுகள் நடப்பதாக நான் நினைக்கிறேன் என்கிறார் டாக்டர் ஜெம்மர். இதைப் போன்ற இத்தகைய கண்டுபிடிப்பு தருணங்களுக்காகத்தான் விஞ்ஞானிகள் வாழ்கிறார்கள் என்கிறார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *