ஐம்பதாயிரம் கோடி ரூபா வரி ஏய்ப்புச் செய்துள்ள இலங்கையின் முன்னணி கோடீஸ்வரர்கள்!

இலங்கையின் முதல் தர செல்வந்தர் தம்மிக பெரேரா மற்றும் ரவி விஜேரத்தின உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பான தகவல்களை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

2015 தொடக்கம் 2020 வரையான காலப்பகுதிக்குள் கோடீஸ்வர வர்த்தகர்கள் சுமார் ஐம்பதினாயிரம் கோடி ரூபா வரி ஏய்ப்புச் செய்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இலங்கையின் முதல்தர செல்வந்தர் தம்மிக பெரேரா மீதான குற்றச்சாட்டு

அதில் இலங்கையின் முதல்தர செல்வந்தர் தம்மிக பெரேரா 575 மில்லியன் ரூபாவையும் இன்னொரு கோடீஸ்வரரான ரவி விஜேரத்தின 760 மில்லியன் ரூபாவையும் வரி ஏய்ப்புச் செய்திருப்பது குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐம்பதாயிரம் கோடி வரி ஏய்ப்புச்செய்துள்ள இலங்கையின் முதல்தர செல்வந்தர்கள்

இவ்வாறாக இலங்கையின் முன்னணி கோடீஸ்வரர்கள் பலரும் வரி ஏய்ப்புச் செய்து செலுத்தாமல் உள்ள நிலுவைத் தொகை மட்டும் ஐம்பதினாயிரம் கோடி ரூபா ஆகும்.

எனவே நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து குறித்த வரி நிலுவையை அறவிட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *