இரு கால்களை இழந்த இராணுவ வீரர் உயரமான மலையில் ஏறி சாதனை!

இன்றைய நவீனக் காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் திறமைகளை ஏதோ ஒரு வழியில் வெளிப்படுத்தி சாதனையை நிகழ்த்தி வருகின்றனர். இதனை சிலர் செய்தியாக கடந்து செல்கிறார்கள், சிலர் இதனை ஒரு உத்வேகமாக எடுத்து நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சித்து வருவார்கள்.

அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அல்லது காலத்தின் கோரதாண்டவத்தால் உடல் உறுப்பை இழந்தவர்களின் சாதனை பற்றிய கதைகள் எப்போதுமே நமக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒரு முன்னாள் ராணுவ வீரரின் கதை பலருக்கும் ஒரு ஊக்கத்தை அளித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பாராசூட் படைப்பிரிவின் 2வது பட்டாலியனில் பணியாற்றி வந்தவர் லியாம் கிங். ராணுவ வீரரான இவர் போர்க்களத்தில் கண்ணி வெடியை மிதித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்

33 வயதில் தனது 2 கால்களைப் பறிகொடுத்த லியாம் கிங், மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார். உடலில் ஏற்பட்ட காயங்களில் மட்டுமல்ல விபத்தால் மனதில் ஏற்பட்ட காயங்களிலிருந்தும் அவர் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக்கொண்டார்.

பல மாத மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு லியாம் கிங்க்கு ப்ரோஸ்த்தெடிக் கால்கள் பொருத்தப்பட்டன. இந்த கால்களின் உதவினால் அவரால் நடமாட, வாகனங்களை ஓட்ட முடிந்தது. இதனால் பழைய நிலைக்குத் திரும்ப ஆரம்பித்த அவர் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஏர்போர்ன் ஃபிட் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் இணைந்த லியாம் தனது செயற்கை கால்களுடன் அதற்கான முயற்சியில் இறங்கினார். அதன்படி லியாம் மற்றும் ஏர்போர்ன் ஃபிட்டின் நிறுவனர் லூக் ரீட் ஆகிய இருவரும் இணைந்து ஒரு சாதனை பயணத்திற்குத் திட்டமிட்டனர்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பதிவில் “உச்சியில் கடும் மழை மற்றும் பனி, வேகமான மற்றும் சீற்றமான காற்று ஆகியவற்றை எதிர்கொண்டு தனது செயற்கை கால்களுடன் கடல் மட்டத்திலிருந்து 3,560 அடி உயரத்தில் உள்ள வேல்ஸின் மிக உயரமான மலையை 12 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்ததாகத் தெரிவித்துள்ளார். தன்னம்பிக்கையுடன் மலை ஏறியதற்காக லியாம் கிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *