ரணில் தோற்றால் இலங்கையும் தோல்வியடையும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் தெரிவிப்பு!

ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதிஆளுநர் கலாநிதி டபில்யூ ஏ விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நிலைமை மாற்றமடையும் என எதிர்பார்க்கின்றீர்களா?ஆம் என்றால்; சிறந்த மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னர் நிலைமை எவ்வளவு மோசமானதாக காணப்படும் ? அடுத்த சில வருடங்கள் எ  எவ்வாறானதாக காணப்படும்?

பதில்-நம்பிக்கைகள் பலனளி;க்காது ஏனென்றால் நம்பிக்கைகள் மனதின் கற்பனையே.
இலக்குகளை அடைவதற்காக நாங்கள் பணியாற்றவேண்டும் – பாடுபடவேண்டும்.
இதன் காரணமாக அமைப்பு முறையில் உண்மையான மாற்றத்திற்கான போராட்டங்கள் -கிளர்ச்சிகள் தொடரவேண்டும்.
தங்கள் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறக்கூடியவர்களால் ஆளப்படும் ஊழல் அற்ற சமூகத்தையே இவர்கள் கோரிநிற்கின்றனர்.

இதனை நிர்வாக அமைப்பிற்கு வெளியே இருந்து நடைமுறைப்படுத்த வேண்டும்-சட்டபூர்வமாக ஆணை வழங்கப்பட்ட ஆட்சி முறைமையுடன்.
மக்களிற்கு நன்மையளிக்ககூடிய அனைவரையும் உள்ளடக்கிய ஸ்தாபனங்களை உருவாக்கவேண்டும்,மக்களின் செல்வத்;தை கொள்ளைடியக்கும் நிறுவனங்களை நிறுவுவதற்கான சாத்தியத்தை நீக்கவேண்டும்,ஆட்சியாளர்களின் அதிகார துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான உரிய ஏற்பாடுகளை முன்வைக்கவேண்டும்.
இது ரணில் விக்கிரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்திற்கான பணிகள்.
ரணில்விக்கிரமசிங்க தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும்- இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *