ஊரடங்கு புதன்கிழமை வரை நீடிப்பு!

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நாளை (10) அதிகாலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *