கண்ணீரில் மிதந்தது நீர்கொழும்பு! – உயிர்நீத்தோரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம்

 

நீர்கொழும்பு, கட்டுவபிட்டிச சென் செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது.

கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றைக் கடந்து திரளாக ஒன்றிணைந்து உயிர்நீத்தவர்களின் பூதவுடல்களுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

சடலங்கள் வீதியில் வரிசையாகச் காவிச் செல்லப்பட்டு ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன.

குறித்த பகுதியில் முப்படையினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *