கருந்துளையின் ஒலிப்பதிவை வெளியிட்ட நாசா ஆராய்ச்சியில் புதிய புரட்சி!

விண்வெளி ஆராய்ச்சியில் அறிவியலாளர்களுக்கு இன்றுவரை மர்மமாக இருக்கும் கருந்துளையின் ஓசையை நாசா விண்வெளி ஆராய்ச்சி வெளியிட்டுள்ளது.

பூமியில் இருந்து கிட்டத்தட்ட 200மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் பெர்சியஸ் கேலக்ஸி கிளஸ்டரின் மையத்தில் உள்ள(Perseus galaxy cluster) கருந்துளையின் ஓசையை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் ஒலி அலைகள் பயணிக்க ஊடகம் இல்லாததால் ஓசைகள் ஏற்படுவது இல்லை என்ற தவறான கருதுகோளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, Chandra X-ray கண்காணிப்பு தொலைநோக்கியின் உதவியுடன், வானியல் தரவுகளை மனித காதுகள் கேட்கும் ஒலி அலைகளாக மாற்றி கருந்துளையின் ஓசையை நாசா விண்வெளி ஆராய்ச்சி வெளியிட்டுள்ளது.

11 மில்லியன் ஒளியாண்டுகள் அளவிலான விண்மீன் திரள்களான பெர்சியஸின் சூடான வாயுவை விண்வெளி ஏஜென்சி வானியலாளர்கள் ஒலி அலைகளாக மாற்ற முடியும் என தற்போது உணர்ந்துள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களை இந்த சூடான வாயு சுழ்ந்து இருப்பதால் இதன் உதவியுடன் ஒலி அலைகள் கடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒலியலைகளை 57 அல்லது 58 என்ற அதன் வளக்கமான ஒலி(octaves)  அளவில் இருந்து மனித காதுகள் உணரும் அளவிற்கு மாற்றியமைத்து sonification செய்து வெளியிட்டுள்ளனர்.

இவை நாசாவின் கருந்துளை நாளை முன்னிட்டு வெளியிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால், விண்வெளியின் கருந்துளை சம்பந்தமாக வெளிவந்த Interstellar திரைப்படம் தொடர்பாக ஆஸ்கர் விருது பெற்ற Hans Zimmer இசைபதிவுடன் நாசா வெளியிட்ட ஒசையும் ஒத்துபோய் இருப்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *