இயற்கை முறையில் உற்பத்தியான காய்கறிகளை எப்படி கண்டுபிடிப்பது?

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும். பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும். காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும். நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்.

ஆக எது கெட்டுப்போகிறதோ!
புழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டு வைத்து குப்பைக்கு போகிறதோ!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத உணவுப் பொருள்கள்.

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டரும் கேன் வாட்டரும் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்?

மெகா சூப்பர் மார்கெட்களில் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல், அழுகாமல் இளமை மங்காது பளபளப்பாக விற்கப்படும் பழங்கள், காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா?

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப்படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு அல்லது வண்டு வைத்து கெட்டுப்போகிறது.

பூச்சிக்கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது எனக் கூறி மணமாக விற்பனை செய்யப்படும் பொருட்கள் நல்ல பொருட்களா? இல்லவே இல்லை! ரெடிமேடு உணவுப் பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்.

டி.வி.விளம்பரம் பார்த்து உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதைவிட மடமையும் முட்டாள்தனமும் வேறு எதுவும் இருக்க முடியாது.

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது சமூக கௌரவமாக மாறிவிட்டது. அதை விடக் கொடுமை. நோயைப்பற்றி மெகா மருத்துவமனை சிகிச்சை அதன் செலவுகள் பற்றி உரத்து பேசுவதும் ஒரு சமூக கௌரவமாக கருதப்படும் அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம் பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம். வரைமுறையற்ற நுகர்வுபௌ பண்பாடும் இதற்கு அடிப்படைக் காரணம்!

உண்மையை உணர்வோம்.

– நன்றி முகநூல் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *