சாய்ந்தமருது குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை தோண்டியெடுக்க அனுமதி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

DNA பரிசோதனைக்காக உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் போது 17 பேர் உயிரிழந்ததாக விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட போதும், புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜெஸ்மினின் உடல் பாகங்கள் காணப்பட்டதாக உடற் கூற்று பரிசோதன போது கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தற்காலைத் தாக்குதலின் போது உயிழரிழந்த நபர்களின் உடல் பாகங்களை மீண்டும் தோண்டியெடுத்து பரிசோதனைக்கு உற்படுத்துவதற்கு விசாரணை அதிகாரிகளினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அம்பாறை பொது மயானத்தில் நாளை காலை குறித்த உடல் பாகங்களை மீண்டும் தோண்டியெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *