மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1000 பேருக்கு பி.சி .ஆர் பரிசோதனைகளை உடனடியாக செய்யவேண்டுமென்று கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் .

நேற்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கொரோனா தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .

கடந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வருவதற்காக வெளிமாவட்டங்களுக்கு அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுமதி பத்திரங்களை எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக பி. சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இவர்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு பதில் அளிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதிய அளவு வசதிகள் இன்மை காரணமாக ஆயிரம் பேருக்கான பி.சி.ஆர் பரிசோதனை செய்ய முடியாது எனவும்,

அதற்கான வசதி வாய்ப்புக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குறைவாக காணப்படுவதாகவும் இதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *