பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை ஆயிரம் வீடியோக்கள் பறிமுதல்!

கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு தொடர்பு உள்ளது என்பதை குறிக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில் 10 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நடிகர் திலீப்பின் மனைவியும், மலையாள நடிகையுமான காவ்யா மாதவன், 2017ஆம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் இருந்து டெலிட் செய்யப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் லட்சக் கணக்கான போட்டோக்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ உள்பட, பல வீடியோ ஆதாரங்கள் சிக்கிய நிலையில் தான் நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நடிகர் திலீப் மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்களின் செல்போன்களில் டெலிட் செய்யப்பட்ட டேட்டாக்களை போலீசார் மீட்டுள்ளனர். மொத்தம் 11,161 வீடியோக்கள் மீட்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், 22 ஆயிரம் ஆடியோக்கள் மற்றும் 2 லட்சம் புகைப்படங்கள் என ஒரு பெரிய டேட்டாவே அழிக்கப்பட்டு இருந்த நிலையில், போலீசார் அதனை ரிகவர் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான பல ஆதாரங்கள் அதில் இருப்பதாக கூறப்படுகின்றன.
வரும் ஏப்ரல் 18ம் தேதிக்குள் மொத்த ஆதாரங்களையும் டிரையல் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை அதிகாரிகள் மேலும், 3 மாத கால அவகாசத்தை கேட்டுள்ளனர். 6,682 வீடியோக்கள், 10,879 ஆடியோக்கள் மற்றும் 65,384 புகைப்படங்களை சோதிக்க வேண்டி உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மறுபக்கம் நடிகர் திலீப்பின் வழக்கறிஞர் கேரள டிஜிபி சந்தியா மற்றும் ஏடிஜிபி ஸ்ரீஜித் மீது புகார் அளித்துள்ளார். ஆதாரங்களை மீடியாக்கள் மூலம் லீக் செய்து நிதிமன்றத்தை அவமதித்துள்ளனர் என்றும், இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கிலும் தனது கட்சிக்காரரான திலீப்பின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்கும் விதத்திலும் போலீசார் முறைகேடாக நடந்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *