மின்னல் வேகத்தில் எகிறும் எலான் மஸ்க் சொத்துமதிப்பு!

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பட்டியலில் மஸ்க் மற்ற கோடீஸ்வரர்கள் இடையிலான வித்தியாசம் வேகமாக அதிகரித்து வருகிறது

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 21 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயாக தற்போது அதிகரித்துள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோசுக்கு சொத்து மதிப்பு 13 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதனால் இருவருக்கும் இடையிலான சொத்து வித்தியாசம் 7 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 12 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பெர்னார்டு அர்னால்ட் 3ஆவது இடத்தில் உள்ளார்.

உலகளவில் 2020-ஆம் ஆண்டில் கொரோனா தொடங்கிய நிலையில் அப்போது மஸ்க்கின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் அம்மதிப்பு 21 லட்சம் கோடியே தாண்டி அதிகரித்து வருகிறது.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இவ்வளவு வேகமாக சொத்து குவிப்பவர் வேறு யாருமில்லை என ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. டெஸ்லா மின்சார கார், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சேவை நிறுவனங்களை நடத்தி வரும் மஸ்க், உலகின் முன்னணி சமூக தளங்களில் ஒன்றான ட்விட்டரின் நிர்வாகக் குழுவிலும் அண்மையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *