கடன் செலுத்துவதை நிறுத்தி default ஆதலும் பின் விளைவுகளும்!

இலங்கையின் வரலாற்றில் பொருளாதார நெருக்கடி அதன் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

இருக்கும்  கையிருப்பை கொண்டு எரிபொருள் உணவு, மருந்துப் பொருள் போன்றவற்றை சமாளிக்க  வேண்டியிருப்பதால், கடன்களையும், International Sovereign Bond களையும் செலுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது!

சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சர்வதேச ரீதீயான  தரப்படுத்தலில் இலங்கை மிகவும் தாழ்ந்து வங்குரோத்து நிலையை அடையும். இதன் பின்னர் இலங்கைக்கு கடன் பெறுவது மிகவும் கஷ்டமான காரியமாகும்.

அது மட்டுமன்றி எமது வங்கிகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் நிலை தோன்றலாம். இதனால்  இறக்குமதிகள் சர்வதேச வியாபாரம் என்பன முற்றிலும் பாதிக்கப்படும்.

ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்னரே  பொருளாதார நிபுணர்களால் எதிர்வு கூறப்பட்ட இந்த நிலையை நாம் அடைந்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *