போதையில் சகவீரர்களின் அட்டூழியத்தால் கை,கால்கள் கட்டப்பட்டு கிடந்த இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், 15வது மாடியில் உள்ள பால்கனியில் தொங்கியது முதல் கைகால்கள் கட்டப்பட்டு கிடந்த திகில் தருணங்களை இந்திய வீரர் அஸ்வினுடன் நடைபெற்ற நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பயணத்தை தொடங்கி பின்னர் பெங்களூரு அணிக்கு மாறி தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக மாறிய யுஸ்வேந்திர சாஹல் தனது வாழ்வின் திக் திக் நிமிடங்களை அஸ்வினுடான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த போது அடுத்தப்போட்டிக்காக பெங்களுருவில் இருந்து கிளம்ப தயாராகி கொண்டிருந்தேன், அப்போது என்னுடைய சகவீரர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) ஒருவர் என்னை அழைத்தார்.

நானும் அமைதியாக அவரிடம் சென்றேன், அவர் நல்ல குடித்து இருந்தார் என நினைக்கிறன் என்னை அவர் அப்படியே தூக்கி 15வது மாடியில் இருந்த பால்கனியில் தொங்கவிட்டு விட்டார், நல்லவேளையாக நான் அவரது கழுத்தை நன்றாக பிடித்து கொண்டேன் இல்லையேல் அன்றே எனக்கு அகலபாதாளம் தான், பிறகு அங்கிருந்தவர்கள் தான் விரைவாக வந்து என்னை அவரிடம் இருந்து மீட்டனர், இதில் நான் மயங்கியே விட்டேன் என்றால் பாருங்களேன் என தெரிவித்துள்ளார்.

அதைப்போலவே மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2011ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற போது நாங்கள் சென்னையில் இருந்தோம் அப்போது செம போதையில் என்னிடம் வந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மற்றும் ஜேம்ஸ் பிராங்கிளின் இருவரும் என் கை கால்களை கட்டி விட்டு வாயில் டேப்பை ஒட்டி விட்டு பார்ட்டிக்குச் சென்றுவிட்டனர்.

அவர்கள் என்னை மறந்தே விட்டார்கள், அடுத்தநாள் காலையில் அறைக்கு சுத்தம் செய்ய வந்த ஹோட்டல் ஊழியர் தான் என்னை அந்த கட்டுகளில் இருந்து மீட்டு எடுத்தார்.

ஆனால் இதற்காக இருவரும் என்னிடம் சிறிய மன்னிப்பு கூட கேட்கவில்லை என தந்து வாழ்வின் திக் திக் நிமிடங்களை யுஸ்வேந்திர சாஹல் அஸ்வினுடான நேர்காணலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *