ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்யும் வசதி ஆப்பிளின் அதிரடி தயாரிப்பு!

ஆப்பிள் நிறுவனம் ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்யும் வசதியுடைய நவீன சார்ஜரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை ஆப்பிள் நிறுவனம் 20 வாட் திறன் கொண்ட சார்ஜர்களை மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் சீன நிறுவனங்கள் 80 வாட் வரை fast charging வசதி உடைய சார்ஜர்களை வழங்குகின்றன.

Smart watch, Smartphone என அனைத்திலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், நவீன சார்ஜரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சார்ஜர் 35 வாட் திறன் கொண்ட type c சார்ஜர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சார்ஜரைக் கொண்டு ஒரே சமயத்தில் இரண்டு ஐபோன்களை சார்ஜ் செய்ய முடியும்.

அத்துடன் ஒரு ஐபோன், ஒரு ஸ்மார்ட் வாட்ச் என இரண்டையும் ஒரே நேரத்தில் இந்த சார்ஜர் மூலம் charge செய்யலாம் எனவும் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *