வீட்டுக்கு அனுப்பப்பட்ட இம்ரான் போகாமல் இருக்க அழைப்பு விடுத்த கோட்டா!

பாகிஸ்தானில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் அதற்காக பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா யோசனை கொண்டு வரப்பட்டபோது அதனை நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு அப்பால் சென்று முறியடிக்க பாகிஸ்தானி பிரதமர் இம்ரான் கானும் முயற்சி எடுத்தார்.

நம்பிக்கையில்லா யோசனையின் தோல்வியில் இருந்து தப்பும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனையை ஜனாதிபதியின் ஊடாக செயற்படுத்தும் கைங்கரியத்தை அவர் மேற்கொண்டார்.

எனினும் அந்த நாட்டின் உயர்நீதிமன்றம் அதற்கு எதிராக தீர்ப்பளித்தது. எனவே நம்பிக்கையில்லாப் யோசனை வாக்கெடுப்புக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்கு உள்ளான அவர் இன்று அதிகாலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நடப்புக்கள் இலங்கையிலும் சாத்தியமாகாது என்று ஒரேயடியாக கூறிவிடமுடியாது.

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா யோசனையை கொண்டு வந்தபோதும் பொதுமக்களின் பாரிய எழுச்சி மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் இலங்கையில் எல்லாமே உச்ச கட்டத்துக்கு சென்றுக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா யோசனை முன்வைக்கப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மறுபுறத்தி;ல் மக்களின் எழுச்சி நாளுக்கு நாள் தீவிரமடைகிறது நாடாளுமன்றில் 3இல் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தற்போது 3இல் இரண்டை இழந்துள்ளது.

வெறுமனே 118 ஐ கொண்டிருக்கிறது. இதில் 6 பேர் மறுபக்கம் சென்றால் நிலைமை மாறி விடும். தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் பொதுமக்களின் எழுச்சி இந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம்.

எனவே இதுவரை ஆட்சியை விட்டுக் கொடுக்காமல் இருந்து வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இன்று அதில் விட்டுக்கொடுப்பு ஒன்றுக்கு வந்துள்ளது. முன்னர் பிரதமர் மஹி;ந்த ராஜபக்சவின் தலைமையிலேயே இடைக்கால நிரவாகம் அமைக்கப்படவேண்டும் என்று கூறி வந்த கோட்டாபய, இன்று நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களை கோரிக்கையான பிரதமர் மஹிந்த உட்பட்ட அமைச்சரவைக்கு பதிலாக இடைக்கால நிர்வாகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை தொடர்பில் பேச்சு நடத்த இணங்கியுள்ளார.;

இதிலிருந்து கோட்டாபயவின் பிடி தளர்வதை காணமுடிகிறது.

மறுபுறத்தில் தம்மை வீட்டுக்கு செல்லக்கோரும் பொதுமக்களின் எழுச்சி கோரிக்கையை பிரதமர் மஹிந்தவை மாற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என்று கோட்டாபய நினைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

எனினும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி இணங்கப்போகும் இடைக்கால நிர்வாக பொறிமுறைக்கு அவர் வசம் உள்ள 20வது திருத்தத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதீத அதிகாரங்களில் எந்தளவான அதிகாரங்களை விட்டுக்கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்தே பொது மக்களின் எழுச்சியில் மாற்றம் ஒன்றை அவதானிக்கமுடியும்.

இடைக்கால நிர்வாகத்தை தமது போக்கில் இயக்காமல், இடைக்கால நிர்வாகத்தின் யோசனைகளை அவர் நடைமுறைப்படுத்தினால், பொதுமக்களின் எழுச்சியில் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கமுடியும்.

எனினும் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்டு அதிகாரம் என்று கருதப்படும் நிறைவேற்று அதிகாரத்துக்கு அப்பால் 20வது திருத்தத்தின்கீழ் அனைத்து அதிகாரங்களையும் தம்வசப்படுத்திய ஒருவராக விளங்கும் கோட்டாபய ராஜபக்ச, அதில் தளர்வுகளுக்கு இணங்குவாரா? என்பதை உலக அரசியல் படிப்பினைகளே தீர்மானிக்கும்.

இன்று கூட அவர் 41 உறுப்பினர்களை சந்திக்க இணங்கியமை கூட பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் படிப்பினையே என்பதை உறுதியாக கூறமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *