ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் சதி கிரிக்கெட் வீரர் மெத்யூஸ் பரபரப்பு டுவிட்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் ட்விட்டரில் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

2019 ஏப்ரல் 19ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றாலும், இந்த தாக்குலுக்கு பின்னணியில் சதி நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது..

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலா மேத்யூஸ், 2021 ஏப்ரல் 19 அன்று  நடந்த சம்பவத்திற்கு பெறுப்புக் கூற வேண்டிய தேவை இருக்கிறது.

இழந்த உயிர்களையும் சிதைந்த குடும்பங்களையும் நீங்கள் புறக்கணிக்க முடியாது.மனிதனுடையதை விட கடவுளின் நீதி மிகவும் சக்தி வாய்ந்தது.

நீங்கள் ஓடலாம், ஆனால் கடவுளின் கோபத்திலிருந்து தப்ப முடியாது என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுடன், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கத்தோலிக்க திருச் சபையினர் மற்றும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத்தையும் மேத்யூஸ் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ரஞ்சித் ஆண்டகை கூறியதை மேற்கோள்காட்டியே மேத்யூஸ் பதிவிட்டதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *