எரிவாயு தட்டுப்பாடு உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்படும் அபாயம்!

மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடியால் அரச நிறுவனங்களிலுள்ள பல முன்னணி உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

​​கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள சுமார் 1500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான அசேல சம்பத் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் உள்ள களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் சம்பத் கூறினார்.
எனவே, தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் எரிவாயு இல்லாமல் போனால் நோயாளிகள் முதல் துப்புரவு பணியாளர்கள் வரை அனைவருக்கும் உணவு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு, கல்வி அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியவற்றிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இந்த நிறுவனங்களில் சேவைகள் பாதிக்கப்படும்.நாடு மிகவும் மோசமான நிலைமையை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிவாயு நிறுவனங்களில் டொலர் தட்டுப்பாடு அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்.
பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறியதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *